திமுக கூட்டணியில் பெரிய திருப்பம்… திடீரென வெளியேறிய முக்கிய கட்சி.. முழு விவரம் என்ன!

Tamilnadu Vazhvurimai Katchi : திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் தமிழக வாழ்வுரிமை கட்சி திடீரென அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறியது. கூடுதல் தொகுதிகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து திமுக தலைமை பரிசீலனை செய்யாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் பெரிய திருப்பம்... திடீரென வெளியேறிய முக்கிய கட்சி.. முழு விவரம் என்ன!

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமிழக வாழ்வுரிமை கட்சி

Updated On: 

20 Mar 2026 14:49 PM

 IST

திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தல் ஒதுக்கப்பட்டதை விட, வரும் சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று திமுக தலைமையிடம் தவாக தலைமை கோரிக்கை வைத்திருந்தது. ஆனால், தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்க முடியாது என்று திமுக தலைமை கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி வெளியேறுவதாக அந்தக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். மேலும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனித்து போட்டியிடப் போவதாகவும், அதற்கான வேட்பாளர்களை வருகிற ஞாயிற்றுக்கிழமை ( மார்ச் 22 ) வெளியிடப் போவதாகவும் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

முதல் கட்டமாக 150 வேட்பாளர்கள் பட்டியல்

இதில், முதல் கட்டமாக 150 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, திமுக தலைமையிடம் கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வைத்திருந்தது. அதில், சில கோரிக்கைகளை பரிசீலனை செய்து அதனை திமுக தலைமை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வேல்முருகன் வலியுறுத்தி இருந்தார். இதற்காக 2 நாள்கள் காத்திருப்பதாக கூறியிருந்தார். மேலும், எங்களது கோரிக்கை குறித்து பரிசீலனை செய்யவில்லை என்றால், எங்கள் கோரிக்கைகளை ஏற்கும் கட்சியுடன் கூட்டணிக்கு செல்லவும், அது தொடர்பான பரிசீலனை செய்வதற்கும் தயாராக இருப்பதாகவும் வேல்முருகன் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க: சட்டமன்ற தேர்தல்: அத்தியாவசிய பணியாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு சிறப்பு அனுமதி…

கூடுதல் தொகுதிகள் ஒதுக்கும் திட்டம் இல்லை

இந்த நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிர்வாகிகளுடன் வேல்முருகன் ஆலோசனை மேற்கொண்டு இருந்தார். இதில், தங்கள் கட்சி தரப்பில் வைக்கப்பட்டிருந்த கோரிக்கைகள் எதையும் திமுக தலைமை பரிசீலனையில் எடுத்துக் கொள்ளவில்லை எனவும், கூடுதல் தொகுதிகள் ஒதுக்கும் எண்ணத்தில் திமுக தலைமை இல்லை எனவும் கூறப்பட்டதாக தெரிகிறது. மேலும், திமுக கூட்டணியில் புதிதாக வந்த கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்குவதும், ஏற்கனவே உள்ள வளரும் கட்சிகளுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்காமல் இருப்பதும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக கூறியதாக தெரிகிறது.

திமுக கூட்டணியில் எம்எல்ஏ வாக இருந்து வரும் வேல்முருகன்

இந்த நிலையில் தான் திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரு சட்டமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதில், கடலூர் மாவட்டம், பண்ருட்டி தொகுதியில் அந்தக் கட்சியின் தலைவர் வேல்முருகன் போட்டியிட்டு எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.

மேலும் படிக்க: Exit Poll vs Opinion Poll: தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகள்.. முடிவுகள் எடுக்கப்படுவது எப்படி?

Follow Us
Related Stories
P. Dhanapal Tamil Nadu Election: சபாநாயகர் பதவியில் தடம் பதித்தவர்.. 7 முறை தொடர் வெற்றியாளர்.. அவினாசி தொகுதியை தக்க வைத்துக் கொள்வாரா தனபால்!
என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணியில் உடன்பாடு.. தொகுதிகள் பங்கீடு.. எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு!
காங்கிரஸ் – இந்திய கம்யூ. மதிமுக போட்டியிட விரும்பும் தொகுதிகள்… திமுக தலைமையிடம் பட்டியல் அளிப்பு.. முழு விவரம் இதோ!
இறுதி கட்டத்தை எட்டும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை.. அதிமுக – 162 இடங்கள், பாஜக – 31 இடங்கள்? பிற கட்சிகளுக்கு எத்தனை தொகுதி?
“10+1 சீட்கள் கேட்டு விசிக பிடிவாதம்”.. இறங்கி வருமா திமுக?.. கூட்டணி பேச்சுவார்த்தையில் நீடிக்கும் இழுபறி..
“தமிழ்நாடு vs டெல்லி”.. நாம் சொன்னது போலவே முடிவெடுப்பது டெல்லிதான்.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!!
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்