IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதம்.. டாப் 2 பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷி!
Fastest Century in IPL: கடந்த 13 ஆண்டுகளாக ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதம் அடித்த சாதனையை கிறிஸ் கெய்ல் தக்கவைத்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் புனே வாரியர்ஸுக்கு எதிராக கெய்ல் வெறும் 30 பந்துகளில் சதம் அடித்தார்.
சர்வதேச கிரிக்கெட் முதல் உள்ளூர் கிரிக்கெட் வரை வெறும் 30-40 பந்துகளில் சதம் அடிப்பது சாத்தியமற்றது. ஆனால், உலகின் பணக்கார லீக்குகளில் ஒன்றாக இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL 2026) ஒவ்வொரு ஆண்டு பல சாதனைகள் குவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கிறிஸ் கெய்ல், டேவிட் மில்லர், மற்றும் டிராவிஸ் ஹெட் போன்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் 40 பந்துகளுக்கும் குறைவான நேரத்தில் ஐபிஎல் சதங்களை அடித்துள்ளனர். அதேநேரத்தில், வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Suryavanshi) உள்ளிட்ட பல இந்தியாவின் இளம் தலைமுறை வீரர்களும் இத்தகைய சாதனையை படைத்துள்ளனர். அந்தவகையில், ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக சதம் அடித்தவர் யார் என்ற சாதனையை பார்ப்போம்.
ALSO READ: 2008 முதல் 2025 வரை.. ஐபிஎல்லில் பர்ப்பிள் மற்றும் ஆரஞ்சு கேப் வென்ற வீரர்கள் பட்டியல்!
ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதம்:
கடந்த 13 ஆண்டுகளாக ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதம் அடித்த சாதனையை கிறிஸ் கெய்ல் தக்கவைத்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் புனே வாரியர்ஸுக்கு எதிராக கெய்ல் வெறும் 30 பந்துகளில் சதம் அடித்தார். இதே போட்டியில்தான் கெய்ல் 17 சிக்ஸர்கள் மற்றும் 13 பவுண்டரிகளுடன் 175 ரன்கள் என்ற வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிவேக சதத்தை அடித்தவர் என்ற சாதனையை இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி வைத்துள்ளார். கடந்த 2025ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியபோது 35 பந்துகளில் சதம் அடித்தார். இது ஐபிஎல்-லில் ஒரு இந்தியர் அடித்த அதிவேக சதமும் ஆகும். இதன்மூலம், 37 பந்துகளில் ஐபிஎல் சதம் அடித்த யூசுப் பதானின் சாதனையை வைபவ் சூர்யவன்ஷி முறியடித்தார். கடந்த 2025 ஐபிஎல் சீசனில்தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய ஹென்ரிச் கிளாசனும் 37 பந்துகளில் சதம் அடித்து ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தினார்.
இதுமட்டுமின்றி டேவிட் மில்லர் 38 பந்துகளிலும், டிராவிஸ் ஹெட் மற்றும் பிரியான்ஷ் ஆர்யா 39 பந்துகளிலும் ஐபிஎல்-லில் சதம் அடித்துள்ளனர். இந்த பேட்ஸ்மேன்களைத் தவிர, ஐபிஎல் வரலாற்றில் வேறு எந்த பேட்ஸ்மேனும் 40 பந்துகளுக்கும் குறைவாக சதம் அடித்ததில்லை.
ALSO READ: ஐபிஎல்லில் ஒரு அணிக்காக விளையாடி அதிக விக்கெட்டுகள்.. முதலிடத்தில் யார்..?
அதிவேகமாக சதம் அடித்த வீரர்கள்:
- 30 பந்துகள் – கிறிஸ் கெய்ல்
- 35 பந்துகள் – வைபவ் சூர்யவன்ஷி
- 37 பந்துகள் – யூசுப் பதான்
- 37 பந்துகள் – ஹென்ரிச் கிளாசென்
- 38 பந்துகள் – டேவிட் மில்லர்
- 39 பந்துகள் – டிராவிஸ் ஹெட்
- 39 பந்துகள் – பிரியான்ஷ் ஆர்யா
ஐபிஎல்லில் அதிவேகமாக அடித்தவர்கள் பட்டியலில் ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ள அபிஷேக் சர்மா உள்ளார். இவர் ஐபிஎல் 2025 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடியபோது 40 பந்துகளில் சதம் அடித்தார். இவரைத் தொடர்ந்து, 45 பந்துகளில் சதம் அடித்த இஷான் கிஷன் அடுத்த இடத்தில் உள்ளார்.