AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Tamil Nadu Election: ஜி பே ட்ரான்ஸ்ஃபரில் வாக்கு வேட்டை: வங்கிகளுக்கு கடும் அலர்ட்..!

Tamil Nadu Assembly Election Digital Vote Bribery: ஜி பே உள்ளிட்ட டிஜிட்டல் முறைகளின் மூலம் வாக்காளர்களுக்கு பணம் செலுத்தும் நடைமுறைகள் தென்பட்டால் உடனடியாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி வங்கி ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. நடவடிக்கைகள் மூலம் தேர்தல் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Tamil Nadu Election: ஜி பே ட்ரான்ஸ்ஃபரில் வாக்கு வேட்டை: வங்கிகளுக்கு கடும் அலர்ட்..!
வங்கிகளுக்கு கடும் அலர்ட்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 17 Mar 2026 16:50 PM IST

ஜி பே உள்ளிட்ட டிஜிட்டல் முறைகளின் மூலம் வாக்காளர்களுக்கு பணம் செலுத்தும் நடைமுறைகள் தென்பட்டால் உடனடியாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி வங்கி ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதைத் தடுக்கவும், தேர்தல் நடைமுறை நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. கருப்புப் பணம் மற்றும் முறையற்ற பணப் புழக்கம் தேர்தலை பாதிக்கக்கூடாது என்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் மூலம் தேர்தல் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

“சந்தேக பரிவர்த்தனைகள் தினசரி அறிக்கை”

வங்கிகள் தங்களது கிளைகளில் நடைபெறும் சந்தேகத்திற்குரிய பணப் பரிவர்த்தனைகள் குறித்து தினசரி அறிக்கைகள் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. திடீரென அதிக தொகை பணம் பரிமாற்றம் நடைபெறுவது போன்ற செயல்பாடுகள் கவனிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

“திடீர் பண வரவு-செலவுகள் கண்காணிப்பு”

கடந்த இரண்டு மாதங்களாக எந்த பரிவர்த்தனையும் இல்லாத வங்கி கணக்குகளில் திடீரென 1 லட்ச ரூபாய்க்கு மேல் பணம் வரவு அல்லது பற்று செய்யப்பட்டால் அவை தீவிர கண்காணிப்பில் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சந்தேகப்பூர்வ பணப் புழக்கத்தை அடையாளம் காண உதவும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

“RTGS மூலம் பெருமளவு பணம் பரிமாற்றம்”

ஒரே கணக்கிலிருந்து ஒரு தொகுதியில் உள்ள பலரது கணக்குகளுக்கு RTGS மூலம் அதிக அளவில் பணம் அனுப்பப்பட்டால் அது குறித்து உடனடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வங்கிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இது தொகுதி அடிப்படையிலான வாக்கு கொள்முதல் முயற்சிகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக கருதப்படுகிறது.

“வேட்பாளர்கள் கணக்குகள் தீவிர தணிக்கை”

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் சார்ந்திருப்போரின் வங்கி கணக்குகளில் 1 லட்ச ரூபாய்க்கு மேல் நடைபெறும் அனைத்து பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்தல் செலவின முறைகேடுகள் தடுக்கப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

“அரசியல் கட்சிகள் பணப் பரிவர்த்தனை கண்காணிப்பு”

தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகளின் வங்கி கணக்குகளில் 1 லட்ச ரூபாய்க்கு மேல் பணம் வரவு அல்லது பற்று செய்யப்பட்டால் அவை தீவிரமாக கண்காணிக்கப்படும். தினசரி அறிக்கைகள் மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் செலவினப் பார்வையாளர்களிடம் ஒப்படைக்கப்படும். கருப்புப் பணம் மற்றும் முறையற்ற பணப் புழக்கம் தேர்தலை பாதிக்கக்கூடாது என்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் மூலம் தேர்தல் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Follow Us