காங்கிரஸ் கட்சியில் நீடிக்கும் உள்கட்சி பூசல்…தலைமைக்கு சென்ற அறிக்கை…மாநில தலைவர் மாற்றப்பட வாய்ப்பா?

TamilNadu Congress Party: தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி பூசல் நிலவி வருவதாக கூறப்படும் நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக அந்தக் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கட்சியினர் சார்பில் தலைமைக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியில் நீடிக்கும் உள்கட்சி பூசல்...தலைமைக்கு சென்ற அறிக்கை...மாநில தலைவர் மாற்றப்பட வாய்ப்பா?

தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்பட வாய்ப்பா

Published: 

13 Jan 2026 17:49 PM

 IST

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இதற்காக அரசியல் கட்சியில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி பூசல் நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதில், காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையின் செயல்பாடு கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பல்வேறு அணிகளாக பிரிந்து உள்ளதாக கூறப்படுகிறது. இதில், ஒரு அணி திமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் எனவும், மற்றொரு அணி தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க வேண்டும் எனவும் போர்க்கொடி தூக்கியதாக கூறப்படுகிறது. மேலும், காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கட்சி சார்ந்த முடிவுகளை சுயநலமாக எடுப்பதாகவும், இதனால், காங்கிரஸ் கட்சி அழிவின் விளிம்பில் இருப்பதாகவும் காங்கிரஸ் தலைமைக்கு தமிழக காங்கிரஸ் கட்சியினர் அறிக்கை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியினர் இடையே உள்கட்சி பூசல்

மேலும், தமிழக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவுக்கு அதிக அளவு விசுவாசமாக இருப்பதாகவும், திமுகவுக்கு கட்டுப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, திமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என்று செல்வப் பெருந்தகை விரும்புவதாகவும், அதே நேரத்தில், தனக்கு கீழ் உள்ள கட்சியினர் தமிழக வெற்றிக் கழகத்தில் கூட்டணி வைக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி வருவதால் கட்சியில் ஒருமித்த கருத்து இல்லாத நிலை நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: கமல் ஹாசன் பெயர் மற்றும் புகைப்படங்கள் வணிக ரீதியில் பயன்படுத்த தடை – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..

தவெக தலைவரை சந்தித்த காங்கிரஸ் புள்ளி

மேலும், திமுகவுடன், காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை நெருக்கம் காட்டி வரும் நிலையில், காங்கிரஸ் தலைமை தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், செல்வப் பெருந்தைக்கு இதில் உடன்பாடு இல்லை என்றும் பேசப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், ராகுல் காந்திக்கு நெருக்கமானவருமாக கூறப்படும் பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்து பேசியிருந்தார். மேலும், தமிழகத்தின் கடன் சுமை குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம் செய்ய வாய்ப்பா

இது, தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் திமுகவை மறைமுகமாக குற்றம் சாட்டுவது போல இருந்தது. இது மட்டுமின்றி, கரூர் தொகுதி எம்பியான ஜோதிமணி தமிழக காங்கிரஸ் கட்சி அழிவின் விளிம்பில் இருப்பதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்திருந்தார். இதனால், தமிழக காங்கிரஸ் கட்சியில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததும், உள்கட்சி பூசல் இருந்ததும் வெட்ட வெளிச்சமானது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில், வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை மாற்றப்படலாம் என்றும், அவருக்கு பதிலாக வேறொரு நபர் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கபடலாம் என்றும் பேசப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: தவெக தலைவர் விஜய்க்கு பாஜக நெருக்கடி கொடுக்க அவசியமில்லை…நயினார் நாகேந்திரன்!

ரஷ்யக் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்த அமெரிக்கா.. ரஷ்யா கடும் எதிர்ப்பு!
ஒரு கைக்குட்டையின் விலை ரூ.7 லட்சம் என்றால் நம்புவீர்களா? வேறெங்கும் இல்லை, இந்தியாவில் தான்..
வேகமாக உருகிய பனி.. 'சுனாமி' போல் ஏற்பட்ட வெள்ளம்!!
புதியதாக வாகனம் வாங்குபவர்கள் RTO செல்ல வேண்டிய அவசியம் இல்லை.. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு..