வாக்களிக்க போறீங்களா… இந்த லிஸ்ட் உங்ககிட்ட இருக்கா? ஒரு முறை பார்த்துடுங்க!
Tamil Nadu Assembly Election : தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க எப்போது செல்ல வேண்டும், என்னென் ஆவணங்கள் எடுத்து செல்ல வேண்டும், எவை செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட முக்கிய அறிவுறுத்தல்களை இந்தப் பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 நாள்களே உள்ளன. இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக மாநிலம் முழுவதும் உள்ள வாக்காளர்கள் தயாராகி வருகின்றனர். ஏப்ரல் 23- ஆம் தேதி ( வியாழக்கிழமை) நடைபெறும் வாக்கு பதிவு நாளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தலாம். அதிகாலையில் வாக்குகளை செலுத்த செல்லும்போது கூட்டம் குறைந்த அளவே காணப்படும். அத்துடன் மதிய உச்சி வெயிலின் போது, வாக்கு செலுத்தப் சென்றால் கூட்டம் அதிகமாக இருப்பதுடன், நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி இருக்கும். எனவே காலையில் வாக்களிக்க செல்வது சரியாக இருக்கும். இதற்காக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்காளர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல வேண்டும். அத்துடன் வாக்குச்சாவடி மையத்தில் பணியில் இருக்கும் அதிகாரியிடம் தங்களது அடையாள சான்றை காண்பிக்க வேண்டும்.
வாக்காளர்கள் வாக்களிக்கும் முறை
பின்னர், தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பது சரிபார்க்கப்படும். தொடர்ந்து, வாக்காளரின் கைவிரலில் அழியாத மை வைக்கப்படும். பிறகு, வாக்களிக்கும் பகுதிக்கு சென்று தங்களது வாக்குகளை செலுத்த வேண்டும். இதற்காக வாக்களிக்க உள்ள வேட்பாளருக்கு அடுத்துள்ள இயந்திரத்தில் உள்ள பட்டனை அழுத்த வேண்டும். பிறகு காட்சி சீட்டின் மூலம் தங்கள் வாக்கை உறுதிப்படுத்திவிட்டு, வாக்கு சாவியை விட்டு வெளியேறிவிடலாம்.
மேலும் படிக்க: ராகுல் காந்தி – மு.க.ஸ்டாலின் இணைந்து பிரசாரம் மேற்கொள்ள வாய்ப்பில்லை.. ஆர்.எஸ்.பாரதி வைத்த அதிரடி ட்விஸ்ட்!




வாக்களிக்க என்ன எடுத்து செல்ல வேண்டும்
முன்னதாக வாக்களிக்க செல்லும்போது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு உள்ளிட்ட அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு புகைப்பட அடையாள அட்டையை எடுத்துச் செல்லலாம். வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும், அதில் உள்ள பெயர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால், ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு வேறொரு அடையாள சான்றுகளை பயன்படுத்தி வாக்களிக்கலாம். மேலும், வாக்குச்சாவடிக்குள் கைப்பேசிகளை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.
வாக்குச்சாவடிக்குள் எது அனுமதி கிடையாது
எந்த ஒரு அரசியல் கட்சி தொடர்புடைய ஆடைகள் அல்லது அணிகலன்களை அணிய கூடாது. வாக்குச் சாவடிக்குள் புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பது குற்றமாகும். அதே போல, வாக்குச் சாவடிக்கு அருகில் அரசியல் விவாதங்களில் ஈடுபடுதல், தடை செய்யப்பட்ட அல்லது சந்தேகத்துக்குரிய பொருள்களை வாக்குச்சாவடிக்குள் எடுத்து வருதல் ஆகியவை குற்ற செயல்களாகும். இந்த விதிகளை பின்பற்றி வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தி ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தரப்பிலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஜெயலலிதாவுக்கு பிறகு நான் முதல்வராகி இருக்க வேண்டும்.. பரபரப்பை கிளப்பிய செங்கோட்டையன்!