இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடந்த சில ஆண்டுகளாக நிலையாக இருப்பது மக்களுக்கு ஒரு வகையில் நன்மையாக இருந்தாலும், அதன் பின்னால் பெரிய பொருளாதார சிக்கல்கள் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது, அரசு நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் விற்பனை நிறுவனங்கள், பெட்ரோலில் லிட்டருக்கு சுமார் 18 ரூபாய் மற்றும் டீசலில் 35 ரூபாய் வரை இழப்பை சந்தித்து வருகின்றன.