குஜராத் மாநிலத்தின் உனா தாலுக்காவில் ஒரு பரபரப்பான வனவிலங்கு மீட்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. 15 அடி ஆழமான விவசாய கிணற்றில் விழுந்த சிங்கம் ஒன்று, வனத்துறை அதிகாரிகளின் தீவிர முயற்சியால் பாதுகாப்பாக மீட்கப்பட்டது. இந்த சம்பவம் ஏப்ரல் 13ஆம் தேதி நவாபந்தர் அருகே நடந்தது. உணவு தேடி காட்டு பகுதிகளில் இருந்து வெளியே வந்த சிங்கம், தவறுதலாக திறந்த நிலையில் இருந்த கிணற்றில் விழுந்தது.