தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்.. மாநிலத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் மே 4!

Tamil Nadu Assembly Election Result: தமிழகத்தில் மே 4- ஆம் தேதி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில், காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள், பின்னர் மின்னனு வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்.. மாநிலத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் மே 4!

தமிழகத்தில் மே 4- இல் தேர்தல் முடிவுகள்

Published: 

30 Apr 2026 07:16 AM

 IST

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இந்த தேர்தலில், அதிக அளவிலான வாக்குகள் ( 84.69  சதவீதம்) பதிவாகி இருந்தது. அவ்வாறு தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் எண்ணும் பணி வருகிற மே 4- ஆம் தேதி ( திங்கள் கிழமை) நடைபெறுகிறது. அன்றைய தினமே சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வெற்றி பெற்ற கட்சி அறிவிக்கப்பட உள்ளன. எனவே, வாக்குகள் எண்ணும் பணிகளை மேற்கொள்வதற்காக தமிழகம் முழுவதும் 62 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. சுமார் 30 நிமிடங்கள் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர், 8:30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணம் பணி தொடங்கப்பட உள்ளது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் தபால் வாக்குகள் மற்றும் மின்னணு வாக்குகள் எண்ணும் பணிக்காக தனித் தனியாக மேஜைகள் அமைக்கப்பட உள்ளன.

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மேற்பார்வை

இரண்டுக்கும் தனித்தனியாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அளவில் மேற்பார்வை செய்வதற்காக அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வாக்கு எண்ணும் பணிகளை மேற்பார்வை செய்து வருவர். அவருடன் ஒரு உதவியாளர் மற்றும் ஒரு நுண் பார்வையாளர் வாக்கு எண்ணும் பணியில் இருப்பார்கள். இதில், 500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேஜை என்ற விகிதத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளை எண்ணும் சுற்றுகளில் கடைசி சுற்று வாக்குகள் எண்ணும் பணி தபால் வாக்குகள் என்னும் பணி முடிவடைந்த உடன் துவங்கப்பட உள்ளது.

மேலும் படிக்க: வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தீவிரம்.. மே 2ல் தமிழகம் வரும் வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரிகள்!!

ஒவ்வொறு சுற்று முடிவும் முகவரிடம் சரிபார்க்கப்படும்

மின்னணு வாக்குப் பதிவுகள் 14 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டு எண்ணப்படுகிறது. வாக்காளர்கள் செலுத்திய வாக்குகள் பல்வேறு சுற்றுகளாக எண்ணப்பட்டு ஒவ்வொரு சுற்றின் முடிவும் வேட்பாளர்களின் முகவர்களிடம் சரிபார்க்கப்பட்டு அறிவிக்கப்படும். தமிழகத்தில் 62 மையங்களில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் அனைத்து சுற்றுகளும் முடிவடைந்த உடன் படிவம் 17 சி- இல் பாகம் 2 நிரப்பப்பட்டு வெற்றி பெற்ற கட்சி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்.

5 தேர்ந்தெடுக்கப்பட்ட விவிபாட் இயந்திரகளுடன்

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன், ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள தலா 5 தேர்ந்தெடுக்கப்பட்ட விவிபாட் இயந்திரங்களில் உள்ள சீட்டுகள் எண்ணப்பட்டு ஒப்பிடப்படும். தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட உள்ளது. இதில், துணை ராணுவ படையினர் மற்றும் மாநில போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும் படிக்க: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை… 1,000 அரசு ஊழியர்களுக்குத் தீவிர பயிற்சி!

Follow Us
Related Stories
மே 4 வாக்கு எண்ணிக்கை.. தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு.. தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு..
தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?.. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் கடும் குழப்பம்!!
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி சட்டப்பேரவை.. புதிய அரசு பொறுப்பேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!
சீரடி சாய் பாபா கோவிலில் தவெக தலைவர் விஜய் தரிசனம்..
Puducherry Election Exit Poll Result: புதுச்சேரியில் மீண்டும் மலர்கிறது தேஜ கூட்டணி ஆட்சி.. முதல்வராகும் என்.ரங்கசாமி.. கருத்துக்கணிப்பில் தகவல்!
TVK Exit Poll Result: ஆட்சி அதிகார கனவில் தவெக.. 40 தொகுதிகளே கை கொடுக்க வாய்ப்பு.. விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த கருத்துக் கணிப்பு!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..