Tamil Nadu Election Highlights: விவசாயிகள், நெசவாளர்களுக்கான வாக்குறுதிகளை அறிவித்த விஜய்..
Tamil Nadu Election 2026 Updates: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் அரசியல் கட்சி தலைவர்களும், ஆதரவாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தவெக தலைவர் விஜய், எடப்பாடி பழனிசாமி, முக ஸ்டாலின், சீமான் உள்ளிட்ட தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர்
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23, 2026 தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த தேர்தல் களத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்பற்ற கூட்டணி, அதிமுக, பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே நாளில் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்தி தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக கட்சிக்கு ஆதரவாக தேசிய தலைவர்கள், சில மாநில முதல்வர்களுமே பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14, 2026 அன்று திருப்பூர் மற்றும் தருமபுரியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவா் விஜய் தோ்தல் பிரசாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளாா். அதே போல தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் 14, 2026 அன்று வேலூர், திருப்பத்தூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடவிருக்கிறார்.
LIVE NEWS & UPDATES
-
நெசவாளர்களுக்கான வாக்குறுதிகளை அறிவித்த விஜய்..
நெசவாளர்களுக்கான அறிவிப்புகள்:
- நெசவாளர்களின் தயாரிப்புகளை சர்வதேச சந்தையில் விற்க அரசு சார்ந்த உலகளாவிய இ-காமர்ஸ் பிராண்ட் உருவாக்கப்படும்
- முக்கிய நகரங்களில் “வெற்றி தறி” விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும்
- கைத்தறி, விசைத்தறி நெசவாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ₹30,000 நேரடி வங்கி பரிமாற்றம்
- கைத்தறிக்கு 500 யூனிட், விசைத்தறிக்கு 1500 யூனிட் இலவச மின்சாரம்
- நூல், சாயம், ரசாயனங்களுக்கு 50% மானியம்
- அனைத்து நெசவாளர்களுக்கும் ₹10 லட்சம் ஆயுள் காப்பீடு
- முதியோர் ஓய்வூதியம் மாதம் ₹3,000 ஆக உயர்வு
-
வாக்குறுதிகளை அள்ளி வீசிய விஜய்..
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், திருப்பூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட போது நெசவாளர்கள், சிறு-நடுத்தர தொழில்கள், விவசாயிகள் மற்றும் அரசு ஊழியர்கள் தொடர்பான பல முக்கிய வாக்குறுதிகளை அறிவித்தார்.
-
விஜய்யை காண வந்த 8 பெண்கள் மயக்கம்..
விஜயின் வருகைக்காக பெருமாநல்லூரில் காத்திருந்த தமிழக வெற்றிக்கழக வேட்பாளருக்கு மயக்கம் ஏற்பட்டது. அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், விஜயைக் காண ஏராளமான பொதுமக்கள் பல மணி நேரமாக கடும் வெயிலிலும் காத்திருந்தனர். இதன் காரணமாக, 8 பெண்கள் அடுத்தடுத்து மயக்கம் அடைந்தனர்.
-
திருப்பூரில் விஜய்யை காண வந்த 10 பேர் மயக்கம்..
திருப்பூரில் விஜய் பிரச்சாரம் நடக்கும் நிலையில், விஜய்யை காண வந்த 10 பேர் மயக்கம் அடைந்து விழுந்தனர். வேட்பாளர், பெண்கள் என 10 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது..
-
பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் பணப்பட்டுவாடா?
நேற்று நள்ளிரவில், சென்னை பெரம்பூர் 44வது வட்டத்திற்குட்பட்ட பகுதியில் கார் ஒன்றில் வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் விநியோகிப்பதாக, பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திலகபாமாவிற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர், தேர்தல் பறக்கும் படையினருக்கும் தகவல் தெரிவித்தார். இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
-
மீண்டும் பழைய திமுகவை பார்க்கவேண்டி இருக்கும்.. முதல்வர் ஸ்டாலின்
தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். “பழைய திமுகவை மீண்டும் பார்க்க வேண்டி வரும்” என மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
பொதுக்கூட்டம் மற்றும் ரோடு ஷோ
நாளை நாகர்கோவில் வரும் பிரதமர் மோடி பொதுக்கூட்டம் மற்றும் ரோடு ஷோவில் ஈடுபட உள்ளார்
-
பிரதமர் வருகை – பாதுகாப்பு தீவிரம்
பிரதமர் மோடி நாளை தமிழகம் வரவுள்ளதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
-
ஜனநாயகன் குறித்து சரத்குமார் பேச்சு
ஹார்ட் டிஸ்க் தயாரிப்பாளரிடம் தான் உள்ளது. இதில் எப்படி சிபிஐ அதிகாரி குமரகுருபரனுக்கு தொடர்பு இருக்கும்? இது தேவையில்லாமல் அரசியலாக்கப்படுகிறது – ஜனநாயகன் குறித்து சரத்குமார் பேச்சு
-
திருக்குறளை 13 மொழிகளில் மொழி பெயர்க்க சொன்னவர் பிரதமர் மோடி
தமிழ், தமிழ் என்று சொல்பவர்கள் தமிழுக்கு பெருமை சேர்ப்பது இல்லை. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தமிழுக்கு பெருமை சேர்த்து கொண்டிருக்கிறார். திருக்குறளை 13 மொழிகளில் மொழி பெயர்க்க சொன்னவர் பிரதமர் மோடி என்பதை மறந்து விடக்கூடாது – சரத்குமார்
-
3 சிலிண்டர்கள் – பாஜக அறிக்கை
பொங்கல், தமிழ் புத்தாண்டு, தீபாவளி நாட்களில் 3 சிலிண்டர்கள் வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி
-
முருகன் விழா- பாஜக தேர்தல் அறிக்கை
முருகனின் தைப்பூசத்தை மாநில விழாவாக கொண்டாடப்படும். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் பாரம்பரிய முறைப்படு தீபம் ஏற்றப்படும் என அறிவிப்பு
-
ரூ.10ஆயிரம் – பாஜக வாக்குறுதி
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10ஆயிரம் வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி
-
பாஜக வாக்குறுதிகள்
ஆண்டுக்கு 3 விலையில்லா சிலிண்டர் வழங்கப்படும்
போக்சோ விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்
தைப்பூசம் மாநில விழாவாக கொண்டாடப்படும்
மகளிருக்கு மாதம் தோறும் ரூ.2000 -
ஒரே சக்தி அ.தி.மு.க. கூட்டணி
தி.மு.கவை வீட்டிற்கு அனுப்ப கூடிய ஒரே சக்தி அ.தி.மு.க. கூட்டணி தான் என டி.டி.வி.தினகரன் பேச்சு
-
பாஜகவின் தேர்தல் வாக்குறுதி
தமிழ்நாடு பாஜகவின் தேர்தல் வாக்குறுதி அறிக்கையை வெளியிட்டார் ஜேபி நட்டா.
-
வீட்டுச் சந்திப்புகளுக்கே அதிக முக்கியத்துவம்
பிரதமர் மோடி தனது உரையில், பெரிய பொதுக்கூட்டங்களை விடவும், சிறிய அளவிலான தெருமுனைக் கூட்டங்கள் மற்றும் வீட்டுச் சந்திப்புகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
-
PM Modi Tamil Nadu Visit : தமிழகம் வரும் பிரதமர் மோடி
பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 15-ம் தேதி நாகர்கோவிலிலும், ஏப்ரல் 18-ம் தேதி கோவையிலும் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றுகிறார். இந்தப் பயணத்தின் முன்னோட்டமாகவே, நேற்று மாலை 4 மணியளவில் தமிழக பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக விரிவான ஆலோசனை நடத்தினார்.
-
முக்கிய ஆலோசனை
எனது பூத், வலிமையான பூத்” (Mera Booth Sabse Mazboot) என்ற பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தேர்தல் வெற்றிக்குத் தேவையான முக்கிய ஆலோசனைகளை அவர் வழங்கினார்
-
பிரதமர் மோடி ஆலோசனை
தமிழகத்தைச் சேர்ந்த பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாகத் கலந்துரையாடினார் பிரதமர் மோடி
-
ஏமாற்றுவேலை – சீமான் ஆவேசம்
திமுகவுக்கு, மாற்று அதிமுக. கிடையாது. அதுபோல, அதிமுகவுக்கு மாற்று திமுக கிடையாது. இரண்டும் ஒரே கட்சி தான். ஒரே ஏமாற்று வேலையைத்தான் பார்க்கிறார்கள் -சீமான்
-
5 இடத்தில் தலைநகர் உருவாக்குவோம் – சீமான்
தலைநகரை மாற்றுவோம், தமிழகத்தை மாற்றுவோம் என்பதே எங்கள் தத்துவம். ஒரு இடத்தில் தலைநகர் இருப்பதை போல், 5 இடத்தில் தலைநகர் உருவாக்குவோம் – சீமான்
-
வாழும் இடத்திலேயே அரசு வேலை – சீமான்
வாழை, தென்னை, மூங்கில், ஆமணக்கு செடி போன்றவற்றை வளர்த்து அதன் மூலம் தொழிற்சாலைகள் உருவாக்கி, வேலைவாய்ப்பை உருவாக்குவோம். நீங்கள் வாழும் இடத்திலேயே, அரசு வேலை கொடுப்பேன்.
-
படிக்காவிட்டாலும் அரசு வேலை
தமிழர் கட்சி ஆட்சியில், படித்தாலும், படிக்காவிட்டாலும் அரசு வேலை வழங்குவேன். பட்டுப்பூச்சி, கழுதை, பன்றி, தேனி, எருமை போன்றவற்றை வளர்ப்பேன்.
-
Seeman Speech : அரசு வேலை – சீமான் விளக்கம்
படித்தவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும் அரசு வேலை வழங்குவது எப்படி? என்பது பற்றி மதுரை பிரச்சாரத்தில் சீமான் விளக்கினார்.
-
ஜனநாயகன் பிரச்னை – சரத்குமார் விளக்கம்
‘ஜனநாயகன்’ திரைப்படம் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியாகிறது என்றால் அதனை திரைப்படத்தின் தயாரிப்பாளரிடம் தான் கேட்க வேண்டும். இந்த திரைப்படம் இணையத்தில் வெளியானதற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் காரணம் என்ற குற்றச்சாட்டு அபத்தமானது – சரத்குமார்
-
வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – சரத்குமார்
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழகத்தின் கடன் ரூ.5 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது, ரூ.10.71 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. திமுக ஆட்சியில் கூடுதலாக வாங்கிய ரூ.5 லட்சம் கோடி கடன் எதற்காக செலவிடப்பட்டது என்பதற்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – சரத்குமார்
-
தமிழிசையை ஆதரித்து சரத்குமார் பிரசாரம்
சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
தமிழகம் என்றாலே ஊழல் – சரத்குமார் பேச்சு
தமிழகம் என்றாலே ஊழல் என்பதை மாற்ற வேண்டும். மத்திய அரசு 11 ஆண்டுகளாக தமிழகத்திற்கு ரூ.11 லட்சம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது – பரப்புரையில் சரத்குமார் பேச்சு
-
விஜய் பிரசாரம் ரத்தாவது ஏன்?
காவல்துறை வழங்கப்பட்டுள்ள நேரத்துக்குள் பிரச்சாரம் செய்ய வேண்டுமென்பதால் பல இடங்களில் நேரமின்மை காரணமாக விஜய் பிரச்சாரம் ரத்து செய்யப்படுவதாக கூறப்படுகிறது
-
விஜய்யின் தருமபுரி பிரசாரம் ரத்து
தர்மபுரியில் இன்று விஜய் பிரசாரத்தை திடீரென த.வெ.க. ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது
-
Tvk Vijay Road show : விஜய் ரோடு ஷோ பிளான்
மதியம் 3 மணிக்கு ஆட்டையாம்பாளையம் பிரிவில் இருந்து பிரசார வாகனத்தில் சென்று அவினாசி பழைய பஸ் நிலையம் அருகே ரோடு ஷோ செல்லவுள்ளார்
-
விஜய் பிரச்சாரம் எங்கெங்கு?
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு. திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், காங்க யம், தாராபுரம் உள்ளிட்ட தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து இன்று விஜய் பிரச்சாரம்
-
TVK Vijay : விஜய் பிரச்சாரம் எங்கெங்கு?
அவினாசி, பெருமாநல்லூரில் த.வெ.க. தலைவர் விஜய் இன்று பிரசாரம் செய்யவுள்ளார்
-
இன்று 11.19 சதவீத வளர்ச்சி
பழனிசாமி ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி வெறும் 0.07 சதவீதம் மட்டுமே. ஆனால் இன்று 11.19 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது என ஸ்டாலின் பேச்சு
-
திராவிட மாடல் 2.0 ஆட்சியை நாம் அமைத்தே ஆக வேண்டும் – மு.க.ஸ்டாலின்
சவாலில் தமிழ்நாடு வெற்றி பெற வேண்டும். அதற்கு திமுக கூட்டணி தான் வெற்றி பெற வேண்டும். திராவிட மாடல் 2.0 ஆட்சியை நாம் அமைத்தே ஆக வேண்டும் – மு.க.ஸ்டாலின்
-
ஆபத்து வடக்கிலிருந்து தான் வரும்
திருவள்ளூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டுக்கு எப்போதும் ஆபத்து வடக்கிலிருந்து தான் வரும் என்றார்.
-
MK Stalin : ஸ்டாலின் உருக்கமான பேச்சு
நான் உயிரோடு இருக்கும் வரை, திமுக இருக்கும் வரை தமிழ்நாட்டை யாராலும் தொட்டுப் பார்க்க முடியாது என திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கமான பேச்சு
-
விஜய் மீது சரத்குமார் காட்டம்
கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் உறவினர்களை வீட்டிற்கு அழைத்து துக்கம் விசாரிப்பது எவ்வளவு ஈனமான செயல் என சரத்குமார் காட்டம்
Published On - Apr 14,2026 7:01 AM