அமைச்சர் சேகர் பாபு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை – பரபரப்பு தகவல்

அமைச்சர் சேகர்பாபுவின் மகன்களுக்கு சொந்தமான நிறுவனத்தில் ஏப்ரல் 13, 2026 அன்று வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.  சென்னை மயிலாப்பூரில் உள்ள சாலை கட்டுமான டெண்டர் நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  மத்திய பாதுகாப்புப் படையினர் துணையுடன் தேர்தல் பறக்கும் படையினரும் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அமைச்சர் சேகர் பாபு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை - பரபரப்பு தகவல்

சேகர் பாபு

Updated On: 

13 Apr 2026 15:28 PM

 IST

சென்னை, ஏப்ரல் 13 :  அமைச்சர் சேகர் பாபுவின் மகன்களுக்கு சொந்தமான நிறுவனத்தில் ஏப்ரல் 13, 2026 அன்று வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.  சென்னை மயிலாப்பூரில் உள்ள சாலை கட்டுமான டெண்டர் நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  மத்திய பாதுகாப்புப் படையினர் துணையுடன் தேர்தல் பறக்கும் படையினரும் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த தகவல்  அரசியல் வட்டாரங்களில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அமைச்சர் சேகர் பாபு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் வெகு சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்ட்டு வருகின்றன. குறிப்பாக தேர்தல் ஆணையமும் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் ரூ.50,000க்கு மேல் பொதுமக்கள் எடுத்து செல்லும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே மீண்டும் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க : தமிழகம் வர மறுக்கும் ராகுல் காந்தி… பிரசாரத்தை புறக்கணிக்க முடிவு? இண்டி கூட்டணியில் வெடிக்கும் யுத்தம்!

மேலும் மருத்துவ காரணங்களுக்கு பணம் எடுத்து சென்றால் அதற்கான ஆவணங்களை வாட்ஸ்அப்பில் காட்டினாலே அனுமதிக்கப்படுவர் என தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.  மேலும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க பல இடங்களில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் அமைச்சர் சேகர் பாபுவின் மகன்கள் மயிலாப்பூரில் உள்ள சாலை கட்டுபமான டெண்டர் நிறுவனத்தில் வருமானவ வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக   பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலின் அடிப்பைடையில் இந்த சோனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இது திமுக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திடீர் வருமான வரித்துறை தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு மற்றும் திமுக தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இதையும் படிக்க : நாளை திருப்பூரில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ.. காவல்துறை அனுமதி!

முன்னதாக முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் தொடர்புடைய சென்னை, புதுச்சேரியில் உள்ள 15 இடங்களில் கடந்த ஏப்ரல் 6, 2026 அன்று வவருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் வரி ஏய்ப்பு தொடர்பான 3 ஆவணங்கள் சிக்கியதால் இந்த சோதனை நடைபெற்றதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow Us
Related Stories
இன்னும் ஓரிரு நாட்களில் களத்தில் உங்களை சந்திப்பேன் – மருத்துவமனையில் இருந்து வீடியோ வெளியிட்ட வானதி சீனிவாசன்..
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.. மீண்டும் திராவிட மாடல் அரசு தான் அமையும் – துரை வைகோ..
அய்யா ராமதாஸ் பூரண குணமடைந்து, மீண்டும் பொது வாழ்க்கையில் ஈடுபட வேண்டுகிறேன் – திமுக தலைவர் ஸ்டாலின்..
3 நாட்கள் மது விற்பனைக்கு தடை… மீறினால் பாயும் நடவடிக்கை.. கலால் துறை அதிரடி உத்தரவு!
தமிழகம் வர மறுக்கும் ராகுல் காந்தி… பிரசாரத்தை புறக்கணிக்க முடிவு? இண்டி கூட்டணியில் வெடிக்கும் யுத்தம்!
நாளை திருப்பூரில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ.. காவல்துறை அனுமதி!
"ஒருமுறை கூட கண் இமைக்கவில்லை" கோலியின் பாராட்டில் நெகிழ்ந்த ஆதித்யா தார்..
ஈரானில் அமெரிக்க விமானி மீட்பு.. மர்மங்கள் நிறைந்த மீட்பு நடவடிக்கை!
toxic மனிதர்களால் ஏற்படும் சிக்கல்.. ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?