AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நாளை திருப்பூரில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ.. காவல்துறை அனுமதி!

TVK Leader Vijay To Conduct Road Show In Tiruppur | தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், நாளை (ஏப்ரல் 14, 2026) திருப்பூரில் அவர் ரோடு ஷோ மேற்கொள்ள உள்ளார்.

நாளை திருப்பூரில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ.. காவல்துறை அனுமதி!
தவெக தலைவர் விஜய்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 13 Apr 2026 12:52 PM IST

சென்னை, ஏப்ரல் 13 : தமிழக வெற்றிக் கழக (TVK – Tamilaga Vettri Kazhagam) தலைவர் விஜய், நாளை (ஏப்ரல் 14, 2026) திருப்பூரில் பிரசாரம் மேற்கொள்ளவும், அவிநாசி புதிய பேருந்து நிலையம் வரை ரோடு ஷோ நடத்தவும் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக தவெக தலைவர் விஜய் நாளை திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் ரோடு ஷோ மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அது ரத்து செய்யப்பட்டு தற்போது திருப்பூரில் ரோடு ஷோ நடத்துவது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், தவெக தலைவர் விஜயின் திருப்பூர் ரோடு ஷோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

நாளை திருப்பூரில் ரோடு ஷோ மேற்கொள்ளும் தவெக தலைவர் விஜய்

தமிழகத்தில் விரைவில் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் இடுபட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார். தேர்தலுக்கு முன்னதாக அனைத்து மாவட்டங்களிலும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக விஜய் அறிவித்த நிலையில், அனுமதி உள்ளிட்ட சிக்கல்கள் காரணமாக சில பிரசாரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : தைரியமிருந்தால் கடிதத்தை வெளியிடுங்கள்.. மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடி சவால்!

திருச்சி, புதுக்கோட்டை ரோடு ஷோ கேன்சல்

குறிப்பாக திருச்சி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் தவெக தலைவர் விஜய் நாளை பிரசாரம் மேற்கொள்வதாக இருந்தது. இந்த நிலையில், அந்த பிரசாரங்கள் ரத்து செய்யப்பட்டு நாளை விஜய் தர்மபுரி மாவட்டத்திற்கு பிரசாரம் மேற்கொள்ள செல்வதால் வேறு தேதியில் திருச்சியில் பிரசாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் தற்போது விஜயின் நாளைய திருப்பூசி பிரசாரம் மற்றும் ரோடு ஷோ குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : எதிர்க்கட்சிகள் விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி.. தமிழகத்துக்கு ரூ.14 லட்சம் கோடி நிதி.. புள்ளி விவரங்களை வெளியிட்ட மத்திய அரசு!

அதாவது தவெக தலைவர் விஜய் நாளை திருப்பூரில் பிரசாரம் மற்றும் ரோடு ஷோ நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. அதாவது, நாளை மாலை 4 மணி அளவில் பெருமாநல்லூர் நான்கு ரோடு பகுதியில் விஜய் பிரசாரம் மேற்கொள்ளவும், அவிநாசி புதிய பேருந்து நிலையம் வரை ரோடு ஷோ நடத்தவும் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us