Govi. Chezhiyan Tamil Nadu Election: திருவிடைமருதூரில் மும்முறை வெற்றி.. எம்எல்ஏ பதவியை தனதாக்கி கொள்வாரா கோவி.செழியன்!
Tamil Nadu Elections 2026 : வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திருவிடைமருதூர் தொகுதியில் 4- ஆவது முறை மீண்டும் வெற்றியை பதிவு செய்தால் திமுக அமைச்சரவையில் மீண்டும் கோவி. செழியனுக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

திருவிடைமருதூரில் வெற்றிக் கொடி நாட்டுவாரா
தமிழகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்து வருபவர் கோவி. செழியன். இவர், 1966- ஆம் ஆண்டு மே மாதம் 13- ஆம் தேதி கோவிந்தன்- பட்டு தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். இளமை காலத்திலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த கோவி. செழியன் திமுகவின் தலைமை கழக பேச்சாளராகவும், மாணவர் அணி செயலாளராகவும் இருந்துள்ளார். பின்னர், கட்சியில் படிப்படியாக வளர்ந்து கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திருவிடைமருதூர் தொகுதியில் திமுக வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். அதில், முதல் வெற்றியை பதிவு செய்த கோவி. செழியன் எம்எல்ஏவாக தேர்வாகி சட்டமன்றத்துக்குள் நுழைந்தார். இதைத் தொடர்ந்து, 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருவிடைமருதூர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கோவி. செழியன் தனது 2-ஆவது வெற்றியை பதிவு செய்தார்.
மேலும் படிக்க: T.R.B. Rajaa Tamil Nadu Election: மன்னார்குடியில் டி.ஆர்.பி.ராஜா மும்முறை வெற்றி.. மீண்டும் வெற்றி வசமானால் அமைச்சரவையில் இடம் உறுதி?
அமைச்சர் பதவியில் கோவி. செழியன்
இதை தொடர்ந்து, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் களமிறங்கிய கோவி. செழியன் 3- ஆவது முறையும் எம்எல்ஏ பதவியை தக்க வைத்துக் கொண்டார். அப்போது, அவருக்கு திமுக தலைமை கொறடா பதவி வழங்கப்பட்டது. பின்னர், அப்போதைய உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த க. பொன்முடிமீது சில விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவரிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு, அந்த உயர் கல்வித் துறை அமைச்சர் பொறுப்பு கோவி. செழியனிடம் வழங்கப்பட்டது.
அதிமுக வேட்பாளர்களை அடுத்தடுத்து வீழ்த்திய கோவி.செழியன்
கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் திருவிடைமருதூர் தொகுதியில் களமிறங்கிய கோவி. செழியன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் டி. பாண்டியராஜனை வீழ்த்தி 48.12 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2016 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இதே தொகுதியில் களமிறங்கிய கோவில் செழியன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் யூ.செட்டுவை வீழ்த்தி 41.93 சதவீத வாக்குகள் பெற்றார். இதைத் தொடர்ந்து, 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட்டு 95,763 (48.26 சதவீத) வாக்குகள் பெற்று எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் இருந்து வருகிறார்.
திமுக அமைச்சரவையில் மீண்டும் இடம்
இதன் மூலம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் தொடர்ச்சியாக மும்முறை வெற்றியை பதிவு செய்தார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் இதே தொகுதியில் கோவி. செழியன் களமிறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. இதே தொகுதியில் 4- ஆவது முறையாக வெற்றியை தக்க வைத்துக் கொள்ளும் பட்சத்தில் கோவி. செழியனுக்கு திமுக அமைச்சரவையில் மீண்டும் உயர் கல்வித் துறை அமைச்சர் பொறுப்பு வழங்க இருப்பதாக திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மேலும் படிக்க: Nainar Nagendran Tamil Nadu Election: அதிமுக டூ பாஜக… கட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை… மீண்டும் வெற்றிக் கொடி நாட்டுவாரா நயினார்!