பாய்ந்து வந்த காரில் ரூ.14 கோடி தங்க நகைகள்.. உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல்.. பறக்கு படை விசாரணை!

Virudhunagar Jewellery Seized: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.14 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பாய்ந்து வந்த காரில் ரூ.14 கோடி தங்க நகைகள்.. உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல்.. பறக்கு படை விசாரணை!

விருதுநகரில் ரூ.14 கோடி தங்க நகை பறிமுதல்

Published: 

18 Mar 2026 06:59 AM

 IST

தமிழகத்தில் அடுத்த மாதம் ஏப்ரல் 23- ஆம் தேதி ( வியாழக்கிழமை) ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியான மறு நிமிடமே தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதற்காக, தமிழகம் முழுவதும் 2, 160 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உரிய ஆவணங்கள் இன்றி பணம், பரிசுப் பொருட்கள், நகைகள் உள்ளிட்ட பொருட்கள் ஏதேனும் கொண்டு செல்லப்படுகிறதா என்பது தொடர்பாக தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த படையில், தேர்தல் நடத்தி விதிகளின்படி, ஒரு நபர் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் கொண்டு செல்ல முடியாது. அவ்வாறு கொண்டு சென்றால் அதற்கான உரிய ஆவணம் வைத்திருக்க வேண்டும். இதே போல, நகைகள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு சென்றாலும் அதற்கான உரிய ஆவணமும் உடன் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில், அவை பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும்.

விருதுநகரில் பறக்கும் படை தீவிர சோதனை

பின்னர், அது தொடர்பான உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு திருப்பி ஒப்படைக்கப்படும். இல்லையெனில், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படும். இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் நகரப் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், ஏராளமான தங்க நகைகள் இருந்தது தெரிய வந்தது. அப்போது, வாகனத்தில் வந்த நபர்களிடம் அதற்கான ஆவணங்களை பறக்கும் படை அதிகாரிகள் கேட்டனர். ஆனால், அவர்களிடம் நகைகளுக்கான உரிய ஆவணங்கள் இல்லை.

மேலும் படிக்க: நெருங்கும் தேர்தல்.. 2,160 பறக்கும் படைகள் அமைப்பு.. ரூ.23.28 கோடி பறிமுதல்..

ரூ.14 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

இதைத் தொடர்ந்து, அந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், அந்த நகைகள் தயார் செய்யப்பட்டு நகை கடைகளுக்கு டெலிவரி செய்வதற்காக கொண்டு சென்றதாக அந்த காரில் வந்தவர்கள் தெரிவித்தனர். மேலும், அவர்களிடம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.14 கோடி என பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரூ. 90 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

இதேபோல, சாத்தூர் அருகே உள்ள வெங்கடாசலபுரம் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில், 77.42 பவுன் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, காரில் வந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் மதுரையை சேர்ந்த நகை வியாபாரிகள் என்பது தெரிய வந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால், அவர்களிடமிருந்து ரூ.90 லட்சம் மதிப்பிலான நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க: டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்