AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஒரே வேட்பாளர்.. இரண்டு தொகுதிகளில் வெற்றி… அடுத்தது என்ன நடக்கும்.. தேர்தல் விதிகள் கூறுவதென்ன?

Tamil Nadu Assembly Election Results 2026: தமிழக சட்டமன்ற தேர்தலில் ஒரு வேட்பாளர் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் என்ன நடக்கும் என்பது குறித்தும், இது தொடர்பாக தேர்தல் ஆணைய விதிகள் என்ன கூறுகிறது என்பதையும் இந்தப்பதிவில் பார்க்கலாம்.

ஒரே வேட்பாளர்.. இரண்டு தொகுதிகளில் வெற்றி… அடுத்தது என்ன நடக்கும்.. தேர்தல் விதிகள் கூறுவதென்ன?
மாதிரிப் புகைப்படம்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 04 May 2026 08:48 AM IST

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி ( வியாழக்கிழமை) சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என சுமார் 4,618 பேர் போட்டியிட்டனர். இதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்து போட்டியிட்டார். இதேபோல, கடந்த காலங்களில் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல் அமைச்சருமான ஜெயலலிதா உள்ளிட்டோர் 2 தொகுதிகளில் போட்டியிட்டு உள்ளனர். இதே போல, அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான ராகுல் காந்தியும் மக்களவைத் தேர்தலில் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு இருந்தார். இந்த நிலையில், ஒரு வேட்பாளர் இந்திய தேர்தல் சட்ட விதிகளின்படி (1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்) ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற தேர்தலில் ஒரே நேரத்தில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியும்.

ஒரு வேட்பாளர் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றால்

அவ்வாறு போட்டியிடும் வேட்பாளர் ஒரு வேளை இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். ஒரே வேட்பாளர் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றால், அதில் எந்த தொகுதியில் எம்எல்ஏவாக தொடர விரும்புகிறாரோ அந்த தொகுதியை தவிர்த்து தான் வெற்றி பெற்ற மற்றொரு தொகுதியில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இது குறித்த முடிவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து சுமார் 10 முதல் 14 நாட்களுக்குள் எடுக்க வேண்டும்.

மேலும் படிக்க: Kariakudi Election Result: அதிமுகவின் கோட்டையாக இருக்கும் காரைக்குடி தொகுதி.. இந்த முறை வெற்றி யாருக்கு?

இரு தொகுதிகளும் காலி என அறிவிக்கப்படும்

அப்படி எடுக்காத பட்சத்தில் இரு தொகுதிகளிலும் காலி என அறிவிக்கப்பட்டு பிரிவு 70- இன் கீழ் இடைத்தேர்தல் நடத்தப்படும். அதன்படி, வேட்பாளர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யும் தொகுதியில் அடுத்த 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும். இதுவே தேர்தல் ஆணையத்தின் நடைமுறை ஆகும். இதில், கடந்த 1996- ஆம் ஆண்டுக்கு முன் நடைபெற்ற தேர்தல்களில் ஒரு வேட்பாளர் எத்தனை தொகுதிகளில் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்ற நிலை இருந்தது.

இடைத் தேர்தல் செலவை வேட்பாளர் ஏற்க வேண்டும்

ஆனால், அதற்கு பின்னர் ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டு தற்போது வரை நடைமுறையில் இருந்து வருகிறது. அத்துடன், அந்த வேட்பாளர் ராஜினாமா செய்யும் தொகுதியில் நடத்தப்படும் இடைத்தேர்தலுக்கான முழு செலவையும் அந்த வேட்பாளரை ஏற்க வேண்டும் என்ற விதிமுறைகளும் நடைமுறையில் உள்ளது.

மேலும் படிக்க: 2026 தமிழக சட்டமன்ற தேர்தல்.. ‘தொங்கு சட்டசபை’ அமைந்தால் அடுத்து என்ன நடக்கும்?.. முழு விவரம்!!

Follow Us