AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Tamil Nadu Election 2026 Results: தபால் வாக்குகளில் முன்னிலை யாருக்கு?.. மக்கள் தீர்ப்பு என்ன?

Tamil Nadu Assembly Election 2026 Results: தபால் வாக்குகளை பொறுத்தவரை தேர்தல் சமயத்தில் அத்தியாவசியப் பணிகளில் இருப்பவர்கள், அரசு ஊழியர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என 6.37 லட்சம் பேர் வாக்கு செலுத்தியுள்ளனர். குறிப்பாக, இதில் 3.5 லட்சம் பேருக்கு மேல் அரசு ஊழியர்களின் வாக்குகள் ஆகும்.

Tamil Nadu Election 2026 Results: தபால் வாக்குகளில் முன்னிலை யாருக்கு?.. மக்கள் தீர்ப்பு என்ன?
மாதிரிப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 04 May 2026 09:20 AM IST

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்.23ம் தேதி நிறைவடைந்த நிலையில், இன்று பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதன்படி, தபால் வாக்குகள் எண்ணும் பணி சரியாக 8 மணிக்கு தொடங்கியது. இதனைத்தொடர்ந்து, 8.30 மணி முதல் வாக்கு இயந்திரத்தில் உள்ள வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில், தபால் வாக்குகள் யாருக்கு சாதகமாக உள்ளன. அதில், எந்த கட்சி முன்னிலை நிலவரம் பெற்றுள்ளது என்பது குறித்து இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

மேலும் படிக்க: Tamil Nadu Election 2026 Results LIVE: தமிழ்நாட்டை ஆளப்போவது யார்? தேர்தல் முடிவுகள் இன்று!

6.37 லட்சம் தபால் வாக்குகள் பதிவு:

தபால் வாக்குகளை பொறுத்தவரை தேர்தல் சமயத்தில் அத்தியாவசியப் பணிகளில் இருப்பவர்கள், அரசு ஊழியர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என 6.37 லட்சம் பேர் வாக்கு செலுத்தியுள்ளனர். குறிப்பாக, இதில் 3.5 லட்சம் பேருக்கு மேல் அரசு ஊழியர்களின் வாக்குகள் ஆகும். 500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேஜை என்ற விகிதத்தில் தபால் வாக்குகளை எண்ணப்பட்டு வருகின்றன. வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையிலேயே வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டது. அப்படி, எண்ணப்படும் வாக்குகள் அனைத்து வேட்பாளர்களின் முகவர்களாலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

திருச்சி கிழக்கில் விஜய் பின்னடைவு:

இந்த நிலையில், பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் 507 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் பின்னடைவை சந்தித்துள்ளார். இதைபோல திரு.வி.க.நகர் தொகுதியில் தவெக வேட்பாளர் எம்.ஆர்.பல்லவி முன்னிலையில் உள்ளார். திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் இனிகோ எஸ். இருதயராஜ் முன்னிலை பெற்றுள்ளார்.

தபால் வாக்குகளில் திமுக முன்னிலை:

தபால் வாக்குகளில் மொத்தமாக 234 தொகுதிகளிலுக்கும் எண்ணப்பட்ட நிலையில், முன்னிலை நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, 92 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதில், திமுக 72 தொகுதிகளிலும், அதிமுக 7 தொகுதிகளிலும், தவெக 13 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. தபால் வாக்குகளில் நாம் தமிழர் கட்சி தனது கணக்கை தொடங்கவில்லை.

மேலும் படிக்க: ஒரே வேட்பாளர்.. இரண்டு தொகுதிகளில் வெற்றி… அடுத்தது என்ன நடக்கும்.. தேர்தல் விதிகள் கூறுவதென்ன?

Follow Us