AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

2026 தமிழக சட்டமன்ற தேர்தல்.. ‘தொங்கு சட்டசபை’ அமைந்தால் அடுத்து என்ன நடக்கும்?.. முழு விவரம்!!

Tamil Nadu Assembly Election Results 2026: பொதுவாக, அதிக இடங்களை வென்ற தனிப்பெரும் கட்சி அல்லது தேர்தலுக்கு முந்தைய பெரிய கூட்டணியின் தலைவரை ஆளுநர் முதலில் அழைக்க வாய்ப்புள்ளது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாதபோது, சில இடங்களை மட்டுமே வென்ற சிறிய கட்சிகள் அல்லது சுயேச்சை வேட்பாளர்கள் 'கிங் மேக்கர்'களாக உருவெடுப்பார்கள்.

2026 தமிழக சட்டமன்ற தேர்தல்.. ‘தொங்கு சட்டசபை’ அமைந்தால் அடுத்து என்ன நடக்கும்?.. முழு விவரம்!!
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 04 May 2026 08:11 AM IST

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்.23ம் தேதி நிறைவடைந்த நிலையில், இன்று பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவ அரசியலுக்கு இடையே, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி, மற்றும் சசிகலா – ராமதாஸ் கூட்டணி எனப் பலமுனைப் போட்டி நிலவுவதால், எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் ‘தொங்கு சட்டசபை’ உருவாகலாம் என அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர். அவ்வாறு தொடங்கு சட்டசபை அமைந்தால் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மேலும் படிக்க: Tamil Nadu Election 2026 Results LIVE: தமிழ்நாட்டை ஆளப்போவது யார்? தேர்தல் முடிவுகள் இன்று!

தொங்கு சட்டசபை என்றால் என்ன?

தமிழக சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள 234 இடங்களில், ஒரு கட்சி அல்லது கூட்டணி ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை என்பது 118 இடங்கள் ஆகும். தேர்தல் முடிவில் எந்தவொரு தரப்பிற்கும் இந்த 118 இடங்கள் கிடைக்கவில்லை எனில், அதுவே ‘தொங்கு சட்டசபை’ (Hung Assembly) எனப்படும். இத்தகைய இக்கட்டான சூழலில், அரசியலமைப்புச் சட்டத்தின்படி மாநில ஆளுநரின் முடிவே மிக முக்கியமானது. பெரும்பான்மை இல்லாத நிலையில், யாரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு.

‘கிங் மேக்கர்’களும் அரசியல் பேரங்களும்:

பொதுவாக, அதிக இடங்களை வென்ற தனிப்பெரும் கட்சி அல்லது தேர்தலுக்கு முந்தைய பெரிய கூட்டணியின் தலைவரை ஆளுநர் முதலில் அழைக்க வாய்ப்புள்ளது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாதபோது, சில இடங்களை மட்டுமே வென்ற சிறிய கட்சிகள் அல்லது சுயேச்சை வேட்பாளர்கள் ‘கிங் மேக்கர்’களாக உருவெடுப்பார்கள். ஆட்சி அமைக்கத் தேவையான ஆதரவைத் தருவதற்குப் பதிலாக, அவர்கள் முக்கியமான அமைச்சரவை இலாக்காக்கள், அரசியல் சலுகைகள் போன்றவற்றை நிபந்தனைகளாக முன்வைக்கலாம்.

நம்பிக்கை வாக்கெடுப்பும் ரிசார்ட் அரசியலும்:

ஆளுநரால் நியமிக்கப்படும் முதலமைச்சர், சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறுவதைத் தவிர்க்க, அரசியல் கட்சிகள் அவர்களை ரகசியமாகச் சொகுசு விடுதிகளில் தங்கவைப்பதும், குதிரை பேரம் நடத்துவதும் என ‘ரிசார்ட் அரசியல்’ நடைபெற வாய்ப்புள்ளது. அதாவது, ஆட்சி அமைக்க தேவையான எம்எல்ஏ-க்களின் பலம் குறையும்போது, எதிர் கட்சிகள் தங்கள் கட்சி எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கிவிடக் கூடாது என்பதற்காக, அவர்களை ரகசியமாக சொகுசு விடுதிகளில் தங்கவைக்கும் ரிசார்ட் அரசியல் தலைதூக்கும்.

மைனாரிட்டி அரசு மற்றும் குடியரசுத் தலைவர் ஆட்சி:

தொடர்ந்து, சபாநாயகர் முன்னிலையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த ஆட்சி தொடர முடியும். ஒரு கட்சி ஆட்சி அமைக்கும்போது, பிற கட்சிகள் அமைச்சரவையில் சேராமல் வெளியில் இருந்து ஆதரவு அளித்தால் அது ‘சிறுபான்மை அரசு’ (Minority Government) எனப்படும். எந்தவொரு கட்சியாலும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என்றால், ஆளுநர் சட்டப்பிரிவு 356-ன் கீழ் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தப் பரிந்துரைப்பார். இதன் விளைவாக, அடுத்த 6 மாதங்களுக்குள் மீண்டும் புதிய தேர்தல் நடத்தப்படும்.

மேலும் படிக்க: தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள புதிய இணையதளம்.. மொபைல் செயலியும் அறிமுகம்..

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 தேர்தல் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. வாக்குகள் சிதறி தொங்கு சட்டசபை அமையுமா அல்லது மக்கள் ஒரு தெளிவான தீர்ப்பை வழங்குவார்களா என்பது இன்னும் சற்றுநேரத்தில் வெளியாகும் தேர்தல் முடிவுகளில் உறுதியாகிவிடும்.

Follow Us