AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தேர்தல் இலச்சினையான எறும்புத் தின்னிகள்- நாமக்கல் முட்டை… வித்தியாசமான தேர்தல் விழிப்புணர்வு…!

Election Awareness : வேலூர் எறும்பு தின்னிகள் மற்றும் நாமக்கல் கோழி மற்றும் முட்டை ஆகியவற்றை பயன்படுத்தி தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில், தமிழக சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேர்தல் இலச்சினையான எறும்புத் தின்னிகள்- நாமக்கல் முட்டை… வித்தியாசமான தேர்தல் விழிப்புணர்வு…!
தேர்தல் விழிப்புணர்வில் இறங்கிய எறும்பு தின்னிகள்- கோழிகள்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 03 Apr 2026 07:14 AM IST

தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி ( வியாழக்கிழமை) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் கட்சிகள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றன. அதன்படி, இந்த தேர்தலை ஜனநாயக திருவிழாவாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், பல்வேறு விதமான தேர்தல் விழிப்புணர்வை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பிரத்தியேகமான உருவத்தை உருவாக்கி விழிப்புணர்வு செய்யுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் பரவலாக காணப்படும் இந்த வகை இரும்புத்தின்னிகளை வித்தியாசமான வகையில் உருவகப்படுத்தப்பட்டு அதற்கு வெள்ளை வேஷ்டி வெள்ளை பனியன் அணிவிக்கப்பட்டு, அதன் பனியனில் வேலூர் மாவட்டம் என்ற வார்த்தை பொறிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் மக்களின் காட்சிக்காக வைப்பு

அதற்கு மேல் தேர்தல் ஆணையத்தின் இலச்சிணை மற்றும் எறும்பு தின்னிகள் கைகளில் ” வேலூர் கோட்டையன்” என்ற பெயரில் தேர்தல் இலச்சினை வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த எறும்புத் தின்னிகள் தங்களது கைகளில் ” என் வாக்கு என் உரிமை” என்ற விழிப்புணர்வு பதாகையை ஏந்தியவாறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு பதாகைகள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் தொகுதிகளில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலகங்கள், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் பொது இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: பெரம்பூரில் போட்டியிடும் திலகபாமா.. வேட்புமனு தாக்கலின் போது தராசுடன் சென்றதால் பரபரப்பு..

நாமக்கல் மாவட்டத்தில் கோழி- முட்டை மூலம் விழிப்புணர்வு

வித்தியாசமான முறையில் எறும்பு தின்னிகளை வைத்து இந்த தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு இருப்பது பொதுமக்கள் மத்தியில் வித்தியாசமாக பார்க்கப்படுகிறது. அதே வேளையில் தேர்தலில் தங்களது வாக்குகள் எவ்வளவு முக்கியம் என்பதையும், 100 சதவீதம் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்பதையும் பொது மக்களுக்கு எடுத்துக் கூறுகிறது. இதே போல, தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி நாமக்கல் மாவட்டத்தில் பிரபலமான முட்டையை வைத்து தேர்தல் இலச்சினை உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

கோழிக்கு வேஷ்டி – சட்டை அணிவித்து விழிப்புணர்வு

அதன்படி தமிழகம் மட்டும் இன்றி உலகம் முழுவதும் பெயர் பெற்ற நாமக்கல் கோழியையும், அதன் முட்டையையும் வைத்து தேர்தல் விழிப்புணர்வு பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதில், கோழியை மனித உருவம் போல சித்தரித்து அதற்கு வேஷ்டி மற்றும் பனியன் அனிவிக்கப்பட்டு கையில் முட்டையை வைத்துள்ளது போலவும், அதில் தேர்தல் நாள் ஏப்ரல் 23 என்ற எழுத்தும் அச்சிடப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் வித்தியாசமான மற்றும் வினோதமான விழிப்புணர்வாக பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி..

Follow Us