2 – ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்.. திமுகவின் வரலாற்றை கூறி சாட்டையை சுழற்றிய எடப்பாடி பழனிசாமி!

Edappadi K Palaniswami: ரூ.1.74 லட்சம் கோடி 2- ஜி ஸ்பெக்டரம் ஊழலில் திராவி முன்னேற்றக் கழகத்தின் அப்போதையை மத்திய அமைச்சர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் நம்மை பற்றி குறை கூற முடியுமா என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

2 - ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்.. திமுகவின் வரலாற்றை கூறி சாட்டையை சுழற்றிய எடப்பாடி பழனிசாமி!

மக்களாட்சி மலரவே அதிமுக-பாஜக கூட்டணி

Updated On: 

11 Apr 2026 20:16 PM

 IST

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தஞ்சாவூரில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் பரப்புரை மேற்கொண்டனர். அப்போது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தஞ்சாவூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டவர் முதல்வர் மு. க. ஸ்டாலின். இவரது ஆட்சி மீண்டும் தொடர வேண்டுமா. பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தால் அது மதவாத கட்சி கிடையாது. ஆனால், அதிமுக கூட்டணி வைத்தால் அது மதவாத கட்சியா. தமிழகத்தில் ஊழல் ஆட்சி அகற்றப்பட்டு, மக்களாட்சி மலரவே அதிமுக- பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. 15 ஆண்டு காலம் மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த திமுக தமிழகத்திற்கு ஒரு திட்டத்தை கொண்டு வரவில்லை.

மத்திய அரசு மீது திமுக திட்டமிட்டு பழி சுமத்துகிறது

தமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்த காலத்திலேயே தமிழகத்துக்கான நிதியை வாங்கித் தரவில்லை. தற்போது, திமுக அரசியல் திட்டமிட்டு மத்திய பாஜக அரசு மீது பழி சுமத்தி வருகிறது. அதிமுக வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் மத்திய பாஜக அரசு நிறைவேற்றி தந்துள்ளது. கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் மக்களுக்கான திட்டங்களை சரியான முறையில் நிறைவேற்றவில்லை. கண்ணில் பார்க்க முடியாத காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரூ.1 லட்சத்து 74 ஆயிரம் கோடியை திமுக கொள்ளை அடித்துள்ளது. இந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நம்மை பற்றி குறை சொல்ல தகுதி உள்ளதா. ஊழலுக்காக களைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: இணையத்தில் கசிந்த ஜனநாயகன்.. கொதித்தெழுந்த படக்குழு.. அதிரடியில் இறங்கிய சைபர் கிரைம்!

தீய சக்தி திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்

இதைத் தொடர்ந்து, டி.டி.வி. தினகரன் பேசியதாவது: தமிழகத்தில் தீய சக்தி திமுகவை ஆட்சி கட்டிலில் இருந்து அகற்ற வேண்டும். இதற்காக எங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் என்று ஒருமித்த கருத்துடன் பணியாற்றி வருகிறோம். தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜெயலலிதா ஆட்சியை அமல்படுத்துவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியாக ஒன்றிணைந்துள்ளோம். டெல்டா மாவட்டத்தில் நாங்கள் கோட்டை விட்டு விட்டோம். மீண்டும் டெல்டா மாவட்டம் அம்மாவின் கோட்டையாக மாற வேண்டும்.

அதிமுக ஆட்சியில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பு

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் டெல்டா மாவட்டம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் விவசாயிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். அதிமுக ஆட்சிக்காலத்தில் தஞ்சை மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. மு. க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் டெல்டா காரன் என்று கூறுகின்றனர். அவர்கள் டெல்டா காரர்கள் இல்லை உல்டா காரர்கள் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: ஒரு புறம் மநீம தலைவர் கமல்ஹாசன்… மறுபுறம் பாமக நிறுவனர் ராமதாஸ்.. சூறாவளி பிரசாரம் பயண திட்டம்!

Follow Us
"ஒருமுறை கூட கண் இமைக்கவில்லை" கோலியின் பாராட்டில் நெகிழ்ந்த ஆதித்யா தார்..
ஈரானில் அமெரிக்க விமானி மீட்பு.. மர்மங்கள் நிறைந்த மீட்பு நடவடிக்கை!
toxic மனிதர்களால் ஏற்படும் சிக்கல்.. ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?