AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gummidipoondi Constituency Election 2026: தொழிற்சாலைகள் அதிகம் இருக்கும் கும்முடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி.. வெற்றி யாருக்கு?

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி, திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய தொகுதிகளில் ஒன்றாகும். சென்னை நகரின் வடக்கு எல்லைக்கு அருகில் உள்ள முக்கிய தொழிற்துறை பகுதியாக இது பார்க்கப்படுகிறது. இது பொதுத்தொகுதியாகும். திருவள்ளூர் மக்களவை தொகுதி உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 11 Apr 2026 21:10 PM IST
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி, திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய தொகுதிகளில் ஒன்றாகும். சென்னை நகரின் வடக்கு எல்லைக்கு அருகில் உள்ள முக்கிய தொழிற்துறை பகுதியாக இது பார்க்கப்படுகிறது. இது பொதுத்தொகுதியாகும். திருவள்ளூர் மக்களவை தொகுதி உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி, திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய தொகுதிகளில் ஒன்றாகும். சென்னை நகரின் வடக்கு எல்லைக்கு அருகில் உள்ள முக்கிய தொழிற்துறை பகுதியாக இது பார்க்கப்படுகிறது. இது பொதுத்தொகுதியாகும். திருவள்ளூர் மக்களவை தொகுதி உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.

1 / 6
இந்த தொகுதியில் கும்மிடிப்பூண்டி, இளவூர், ஆரம்பாக்கம், SIPCOT தொழிற்பகுதி மற்றும் பல கிராமப்புற பகுதிகள் அடங்குகின்றன. தொழிற்சாலை தொழிலாளர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியாகவும், அதே சமயம் விவசாயிகளும் அதிகமாக உள்ள பகுதியாகவும் இது பார்க்கப்படுகிறது. SIPCOT தொழிற்சாலைகள், இரசாயன உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், சென்னை துறைமுகம் அருகாமை ஆகிய காரணங்களால் இங்கு தொழில் வளர்ச்சி அதிகமாக உள்ளது. சரக்கு போக்குவரத்து மையமாகவும் இந்த தொகுதி விளங்குகிறது.

2 / 6
2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் டி.ஜே. கோவிந்தராஜன் 1,26,452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில் பாமக வேட்பாளர் பிரகாஷ் 75,514 வாக்குகள் பெற்றார். மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி மற்றும் நான்காவது இடத்தில் தேமுதிக  இருந்தது குறிப்பிடத்தக்கது. வரலாற்று ரீதியாக, இந்த தொகுதி அதிமுக கட்சிக்கு சாதகமானதாக கருதப்படுகிறது. 1977ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அதிமுக ஏழு முறைவும், திமுக மூன்று முறைவும் வெற்றி பெற்றுள்ளன.

3 / 6
வேகமாக வளர்ந்து வரும் தொகுதி என்றாலும், தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசு, குடிநீர் தட்டுப்பாடு, தொழிற்சாலை கழிவுகள் நீர்நிலைகளில் கலப்பது போன்ற பிரச்சினைகள் மக்கள் மத்தியில் கவலைக்குரியதாக உள்ளன. மேலும், கனரக வாகன போக்குவரத்துக்கு போதிய சாலை வசதிகள் இல்லாததும், தொழிலாளர் நலன் குறித்த குறைபாடுகளும் குறிப்பிடப்படுகின்றன.

4 / 6
2026 சட்டமன்ற தேர்தலில், திமுக சார்பில் மீண்டும் கோவிந்தராஜனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் சுதாகர், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் எஸ். விஜயகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் ஸ்ரீதர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

5 / 6
இதனால், இந்த தொகுதியில் பல்வேறு கட்சிகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. தொழிலாளர் வாக்குகள், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மற்றும் அடிப்படை வசதிகள் ஆகியவை தேர்தல் முடிவை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகின்றன.

6 / 6
Follow Us