AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோடீஸ்வர யோகம் தரும் திருவோண விரதம்.. இந்த ராசிக்காரர்களுக்கு செல்வம் கொட்டப்போகுது..

Thiruvonam Viratham: பெருமாள் கோயிலைச் சுமார் 27 முறை சுற்றி வந்து வழிபட வேண்டும். அப்போது செல்போன் போன்ற உலகியல் விஷயங்களைத் தவிர்த்து, முழு மனதோடு நாராயணனை நினைக்க வேண்டும். திருவோண விரதத்தின் போது பெருமாளுடன் சேர்த்து கருட பகவானையும் (பக்ஷிராஜன்) வழிபட வேண்டும்.

esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 11 Apr 2026 13:11 PM IST
ஒவ்வொரு மாதமும் வரும் திருவோண நட்சத்திரம் மஹாவிஷ்ணுவிற்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாகச் சனிக்கிழமையுடன் இணைந்து வரும் திருவோண நட்சத்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. 2026 ஏப்ரல் 11-ஆம் தேதி (பங்குணி 28) சனிக்கிழமையன்று வரும் இந்தத் திருவோண விரதத்தின் சிறப்புகளை காணலாம். சனி பகவானின் வீடான மகர ராசியில், சந்திரனின் நட்சத்திரமான திருவோணம் வரும்போது, அதனை மஹாவிஷ்ணுவிற்குரிய நாளாகக் கொண்டாடுகிறோம். சனிக்கிழமையுடன் இந்தத் திருவோணம் இணைவதால், சனி தோஷங்கள் விலகி நாராயணனின் பரிபூரண அருள் கிடைக்கும்.

1 / 5
பத்தாம் இடமும் தொழில் மேன்மையும்: காலபுருஷ தத்துவப்படி மகரம் பத்தாவது ராசியாகும். இது கர்மாவைக் குறிக்கும். இந்த நாளில் விரதமிருந்து பெருமாளை வழிபடுவதால், செய்யும் தொழிலில் லாபம் பெருகும், அரசியலில் உயர்வு கிடைக்கும் மற்றும் சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு அசுர வேக வளர்ச்சி உண்டாகும்.
இந்தத் திருவோண விரதத்தை மேற்கொள்வதால் மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ஆறு ராசிக்காரர்களுக்குக் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.

பத்தாம் இடமும் தொழில் மேன்மையும்: காலபுருஷ தத்துவப்படி மகரம் பத்தாவது ராசியாகும். இது கர்மாவைக் குறிக்கும். இந்த நாளில் விரதமிருந்து பெருமாளை வழிபடுவதால், செய்யும் தொழிலில் லாபம் பெருகும், அரசியலில் உயர்வு கிடைக்கும் மற்றும் சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு அசுர வேக வளர்ச்சி உண்டாகும். இந்தத் திருவோண விரதத்தை மேற்கொள்வதால் மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ஆறு ராசிக்காரர்களுக்குக் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.

2 / 5
வழிபடும் முறைகள்: அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, அங்கு நடைபெறும் திருமஞ்சனம் மற்றும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொள்ள வேண்டும். திருப்பதி போன்ற மலை சார்ந்த கோயில்களுக்குச் செல்வது இன்னும் சிறப்பானது. விரதத்தின் போது 'ஓம் நமோ நாராயணாய நமோ நமஹ' என்ற அஷ்டாட்சர மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது மிகுந்த பலனைத் தரும்.

3 / 5
பிரதட்சணம்: பெருமாள் கோயிலைச் சுமார் 27 முறை சுற்றி வந்து வழிபட வேண்டும். அப்போது செல்போன் போன்ற உலகியல் விஷயங்களைத் தவிர்த்து, முழு மனதோடு நாராயணனை நினைக்க வேண்டும். திருவோண விரதத்தின் போது பெருமாளுடன் சேர்த்து கருட பகவானையும் (பக்ஷிராஜன்) வழிபட வேண்டும். கருடனை வழிபடுவதால் ராகு-கேது தோஷம், காலசர்ப்ப தோஷம் மற்றும் நாக தோஷங்கள் அடியோடு விலகும்.

4 / 5
ஜாதகத்தில் திருமணத் தடை இருப்பவர்கள், கருட தண்டகம் பாடி கருடனை வழிபடுவதன் மூலம் தடைகள் நீங்கி நல்வாழ்வு பெறுவார்கள். பெருமாளின் திருவருள் கிடைத்தால் மகாலட்சுமியின் பார்வை தானாகவே நம் மீது விழும். இதனால் "பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை" என்ற நிலைக்கு ஏற்ப, வறுமை நீங்கிச் செல்வம் பெருகி, கோடீஸ்வர யோகம் உண்டாகும்.

5 / 5
Follow Us