AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

யார் வந்தாலும் திமுக கூட்டணியை வெல்ல முடியாது.. 234 தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம் – திமுக தலைவர் ஸ்டாலின்..

இந்த நிலையில், ஏப்ரல் 11ஆம் தேதி இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். காலை நடைப்பயணம் மேற்கொண்டு, இலுப்பூர் மற்றும் அன்னவாசல் பகுதிகளில் மக்களிடம் வாக்கு சேகரித்தார். விராலிமலை தொகுதி திமுக வேட்பாளர் செல்ல பாண்டியனை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்தார்.

யார் வந்தாலும் திமுக கூட்டணியை வெல்ல முடியாது.. 234 தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம் – திமுக தலைவர் ஸ்டாலின்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 11 Apr 2026 09:40 AM IST

புதுக்கோட்டை, ஏப்ரல் 11, 2026: வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் யார் என்ன செய்தாலும் திமுக கூட்டணியின் வெற்றியைத் தடுக்க முடியாது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் அனைவரும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு, தங்களது தொகுதிகளில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்த சூழலில், திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம்:

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு, ரோடு ஷோ நடத்தி மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், இரண்டு நாள் பயணமாக தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள சென்னை இருந்து புறப்பட்டுச் சென்றார்.

இந்த நிலையில், ஏப்ரல் 11ஆம் தேதி இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். காலை நடைப்பயணம் மேற்கொண்டு, இலுப்பூர் மற்றும் அன்னவாசல் பகுதிகளில் மக்களிடம் வாக்கு சேகரித்தார். விராலிமலை தொகுதி திமுக வேட்பாளர் செல்ல பாண்டியனை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்தார்.

மேலும் படிக்க: “ஆளத்தெரியாதவர்கள் ஆண்டால் கடன் தான் வரும்!”.. முதல்வர் ஸ்டாலினை விளாசிய இபிஎஸ்!!

யார் வந்தாலும் கவலையில்லை – மு.க ஸ்டாலின்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் அவர்களின் வருகை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “யார் வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை; நாங்கள் எங்கள் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

234 தொகுதியிலும் வெற்றி நிச்சயம்:

மேலும், “மக்கள் அளிக்கும் ஆதரவை பார்த்தால், 234 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி தோல்வியின் உச்சத்தில் இருப்பதால் விரக்தியில் பேசுகிறார்; அதைப் பற்றி கவலைப்படவில்லை” என்றும் கூறினார்.

அத்துடன், “எத்தனை பேர் வந்தாலும் திமுக கூட்டணியை வெல்ல முடியாது. தலைமைச் செயலாளர் மாற்றம், சென்னை மாநகர காவல் ஆணையர் மாற்றம் போன்றவற்றை தேர்தல் ஆணையம் மேற்கொண்டாலும், அதைப் பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை” எனவும் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Follow Us