திமுகவின் 5 ஆண்டு ஆட்சியில் 161 நாள்கள் மட்டுமே சட்டமன்றம் கூடியுள்ளது.. இது 73 ஆண்டு கால வரலாற்றில் மிகவும் குறைவாகும்!

Legislative Assembly Session : 2021 முதல் 2026 திமுக ஆட்சி காலத்தில் 161 நாள்கள் மட்டுமே சட்டமன்ற கூட்டத்தொடர் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கடந்த 1952- ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் சட்டமன்ற வரலாற்றில் குறைவாகும்.

திமுகவின் 5 ஆண்டு ஆட்சியில் 161 நாள்கள் மட்டுமே சட்டமன்றம் கூடியுள்ளது.. இது 73 ஆண்டு கால வரலாற்றில் மிகவும் குறைவாகும்!

திமுக ஆட்சியில் 161 நாள்கள் மட்டுமே கூட்டத் தொடர் நடைபெற்றுள்ளது

Updated On: 

23 Feb 2026 12:07 PM

 IST

தமிழகத்தில் 6 மாதங்களுக்கு ஒரு முறை சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என்பது விதியாகும். அதன்படி, ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் தமிழக ஆளுநர் உரை நிகழ்த்துவது மரபாகும். இதைத் தொடர்ந்து, நிதிநிலை அறிக்கை கூட்டம், துறை வாரியான மானிய கோரிக்கை விவாதம் ஆகியவை நடைபெறும். இதே போல, மழைக்காலத்துக்கு முன்னதாக மழைக்கால கூட்டத் தொடரும் தொடங்கி நடைபெறும். அதன்படி, கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் ஜனநாயக முறைப்படி சட்டமன்ற தேர்தல்கள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறும் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் சட்டமன்ற கூட்டத் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 1952- ஆம் ஆண்டு முதல் 2026- ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஆட்சி காலத்தில் தற்போது, திமுக ஆட்சியில் 161 நாட்களே சட்டமன்ற தொடர் நடைபெற்றுள்ளது. இது கடந்த 73 ஆண்டு கால சட்டமன்ற வரலாற்றில் மிக குறைவாகும்.

5 ஆண்டுகளில் 161 நாள்கள் மட்டுமே கூட்டத்தொடர்

கடந்த 2021- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ஒரு ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தொடர் நடத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 2021- ஆம் ஆண்டு மே மாதம் முதல் தற்போது 2026- ஆம் ஆண்டு பிப்ரவரி வரை 5 ஆண்டுகளில் 161 நாட்கள் மட்டுமே சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுள்ளது. இது 73 ஆண்டுகால சட்டமன்ற வரலாற்றில் மிகவும் குறைவாகும். இதற்கு முன்பு கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் 1991- ஆண்டு வரை 104 நாட்களை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றிருந்தாலும், அப்போதைய ஆட்சி காலம் மூன்று ஆண்டுகளுக்கும் குறைவாக இருந்தது.

மேலும் படிக்க: வேலூர் தவெக தலைவர் விஜய்யின் பொதுக்கூட்டம் – கடைசி நேரத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு

1952 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நடைபெற்ற பேரவை நாள்கள்

அதன்படி, கடந்த 1952- ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சட்டமன்ற கூட்டத் தொடர் நாட்கள் எத்தனை நாட்கள் நடைபெற்றது என்பது குறித்த முழு விவரம்: 1952 முதல் 1957 வரை 314 நாட்களும், 1957 முதல் 1961 வரை 305 நாட்களும், 1962 முதல் 1967 வரை 252 நாட்களும், 1967 முதல் 1971 வரை 199 நாட்களும், 1971 முதல் 1976 வரை 326 நாட்களும், 1977 முதல் 1980 வரை 179 நாட்களும், 1980 முதல் 1984 வரை 304 நாட்களும், 1985 முதல் 1988 வரை 178 நாட்களும் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுள்ளது.

2021 முதல் 2026 வரை நடைபெற்ற கூட்டத் தொடர்

இதே போல, 1989 முதல் 1991 வரை 104 நாட்களும், 1991 முதல் 1996 வரை 224 நாட்களும், 1996 முதல் 2001 வரை 264 நாட்களும், 2001 முதல் 2006 வரை 181 நாட்களும், 2006 முதல் 2011 வரை 226 நாட்களும், 2011 முதல் 2016 வரை 191 நாட்களும், 2016 முதல் 2021 வரை 162 நாட்களும் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று உள்ளது. இதில், 2021 முதல் 2026 வரை வெறும் 161 நாட்களே சட்டமன்ற கூட்டத்துடன் நடைபெற்றுள்ளது. இந்த தகவலானது அரசியல் கட்சிகள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் படிக்க: அமமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை.. டிடிவி தினகரன் கொடுத்த விளக்கம்..

Related Stories
தேஜ கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது… நயினார் நாகேந்திரன் அளித்த பதில்!
விஜய்க்கும்- ஸ்டாலின் சாருக்கும் இடையேதான் தேர்தல் போர்… வேலூரில் விஜய் ஆவேச பேச்சு!
காங்கிரஸ் கோட்டையாக திகழும் காரைக்குடி.. களமிறங்கும் முடிவில் சீமான்.. வெற்றிக்கு வித்திடுமா அரசியல் வியூகம்!
தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்.. வேலூர் புறப்பட்டார் விஜய்.. சாலை மார்க்கமாக 140 கிமீ பயணம்!
வாக்குப்பதிவு இயந்திர பேலட் சீட்டில் புதிய நடைமுறை.. வாக்காளர்களுக்கு இனி குழப்பமே வேண்டாம்.. என்ன அது!
வேலூர் தவெக தலைவர் விஜய்யின் பொதுக்கூட்டம் – கடைசி நேரத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு
ஒரு மில்லியன் ரீல்ஸ் - அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜ் கொண்டாட்டம்
நடிகர் சல்மான் கானின் தந்தை மருத்துவமனையில் அனுமதி
ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா - வெளியான பரபரப்பு தகவல்
கார்திக் சுப்புராஜ் படத்தில் நடிகர் சுஹாஸ்!