ஜனநாயகன் காலை வாரிய ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி… விஜய்க்கு கடைசி நேரத்தில் இப்படியா… முழு விவரம் உள்ளே!

Tamilaga Vettri Kazhagam: தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு அளித்து வந்த ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி தங்களது ஆதரவை திடீரென திரும்ப பெற்றுள்ளது. இதனால், அரசியல் களத்தில் விஜய் தனித்து விடப்பட்டுள்ளார். இது குறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஜனநாயகன் காலை வாரிய ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி... விஜய்க்கு கடைசி நேரத்தில் இப்படியா... முழு விவரம் உள்ளே!

தவெகவுக்கான ஆதரவை திரும்ப பெற்ற ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி

Published: 

11 Mar 2026 06:35 AM

 IST

தமிழகத்தில் நெருங்கி வரும் சட்டமன்ற தேர்தலை மையமாக வைத்து அரசியல் கட்சிகள் தங்களுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் நேர்காணல், வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு, தேர்தல் வாக்குறுதிகள் என்பன உள்ளிட்ட பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. இதில், திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, தேமுதிக என்பன உள்ளிட்ட 26 கட்சிகள் அங்கம் வகித்து வருகின்றன. இதே போல, அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக (அன்புமணி தரப்பு), இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்து வருகின்றன. நாம் தமிழர் கட்சி தனித்து களம் காணும் சூழ்நிலையில் உள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளின் கூட்டணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளன.

தவெகவுக்கு மிகப்பெரிய சறுக்கல்

இந்த நிலையில், மற்றொரு பிரதான கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஒரு மிகப்பெரிய சிக்கலை சந்தித்துள்ளது. அதில், தமிழக வெற்றிக் கழகத்துடன் எந்த கட்சியும் கூட்டணிக்கு வரலாம் என்று தெரிவித்திருந்த நிலையில், ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி மட்டும் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளித்து வந்தது. ஆனால், தங்களுடைய ஆதரவை தற்போது வாபஸ் பெறுவதாக அந்த கட்சி மிகப்பெரிய குண்டை வீசி உள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் தலைமை கூறுகையில், தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் ஆகிவை தொடர்பாக எங்கள் கட்சியினர் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது.

மேலும் படிக்க: ஈரான் போர் தாக்கம்.. எரிவாயு தட்டுப்பாடு குறித்து பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

திமுகவுக்கு ஆதரவு அளிக்கும் ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி

இதன் காரணமாகவே தமிழக வெற்றிக் கழகத்திற்கான தங்களது ஆதரவை வாபஸ் பெற்றுள்ளோம் என்று விளக்கம் அளித்துள்ளது. ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சியானது கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவுக்கு ஆதரவு அளித்து வந்தது. இந்த நிலையில், முதல் முதலாக தேர்தலை சந்திக்க உள்ள விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பதாக கடந்த ஆண்டு தெரிவித்திருந்தது. தற்போது, அதனை வாபஸ் பெற்றதுடன் திமுகவுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாகவும், தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அரசியல் களத்தில் தனித்து விடப்படும் விஜய்

தவகவின் முதல் மாநில மாநாட்டில் விஜயை முதல்வராக ஏற்கும் எந்த கட்சிகளும் கூட்டணிக்கு வரலாம் எனவும், அப்படி வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று மிகப்பெரிய ஆஃபரை வழங்கி இருந்தது. ஆனால், அன்று முதல் தற்போது வரை எந்த கட்சிகளும் தமிழக வெற்றிக் கழகத்தில் கூட்டணிக்காக வரவில்லை. இதில், அத்திப்பூ பூத்தது போல ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி மட்டும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்திருந்தது. தற்போது, அந்த ஆதரவும் வாபஸ் பெறப்பட்டு விஜய் தனித்து விடப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க: எரிவாயு தட்டுப்பாடு.. மத்திய மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..

Follow Us
Related Stories
ராமதாஸ் – சசிகலா அமைக்கும் புது கூட்டணி?… தைலாபுரத்தில் நடந்த திடீர் சந்திப்பு… பின்னணி என்ன!
சீமான் சின்னம் இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கீடு… தேர்தல் ஆணையம் உத்தரவு!
பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை… 10 கி.மீ. பிரம்மாண்ட ரோடு ஷோ.. திக்குமுக்காட போகும் திருச்சி!
Perambur Constituency Election 2026: மழைநீர் வடிகால் முதல் போக்குவரத்து நெரிசல் வரை.. பெரம்பூர் சட்டமன்ற தொகுதியின் நிலவரம் என்ன?
ஓ. பன்னீர் செல்வம் மனநிலையில் திடீர் மாற்றம்… வீட்டில் மீண்டும் குடியேறிய ஜெயலலிதா புகைப்படம்!
Seeman Tamil Nadu Election: தனித்து களம் காணும் நாதக… காங்கிரஸ் கோட்டையில் களமிறங்கும் சீமான்.. வெற்றியை வசமாக்குவாரா!
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..