Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தீபாவளி Shopping-ல் பணத்த சேமிக்கனுமா?.. அப்போ இந்த 3 டிப்ஸ்களை பின்பற்றுங்கள்!

Save Money on Diwali Shopping | தீபாவளி பண்டிகை காரணமாக பொதுமக்கள் அதிக பணம் செலவு செய்து ஷாப்பிங் செய்வர். ஆனால், ஒரு சில விதிகளை பின்பற்றி அதற்கு ஏற்ப திட்டமிட்டு ஷாப்பிங் செய்யும் பட்சத்தில் கூடுதல் பண செலவை குறைக்க முடியும்.

தீபாவளி Shopping-ல் பணத்த சேமிக்கனுமா?.. அப்போ இந்த 3 டிப்ஸ்களை பின்பற்றுங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 11 Oct 2025 15:59 PM IST

இந்தியர்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு முக்கிய பண்டிகையாக தீபாவளி உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசுக்களை வெடித்து, இனிப்புகளை பரிமாறி மிகவும் கோலாகலமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடுவர். இது தவிர தீபாவளி பண்டிகைக்காக பொதுமக்கள் ஏராளமாக ஷாப்பிங் செய்வர். அதற்காக பலர் கடன் கூட வாங்குவர். இந்த நிலையில், தீபாவளி பண்டிகை ஷாப்பிங்கில் பணத்தை சேமிப்பது எப்படி என்பது குறித்த சில டிப்ஸ்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பட்ஜெட்

எந்த ஒரு விஷயத்திற்காக ஷாப்பிங் செல்ல வேண்டும் என்றாலும் அதற்கு பட்ஜெட் போடுவது சிறந்த பழக்கமாகும். எனவே நீங்கள் தீபாவளி ஷாப்பிங் செல்வதற்கு முன்னதாக என்ன என்ன வாங்க போகிறீர்கள், அதற்காக எவ்வளவு பணம் செலவு செய்ய போகிறீர்கள் என்பதை திட்டமிடுங்கள். குறிப்பாக ஆடைகளுக்கு எவ்வளவு, பட்டாசுகளுக்கு எவ்வளவு, இனிப்புகளுக்கு எவ்வளவு என பட்ஜெட்டை பிரித்துக்கொள்ளுங்கள்.

இதையும் படிங்க : Flipkart Diwali Sale: பிளிப்கார்டில் ஆஃபரில் ஸ்மார்ட்போன்.. எப்போது தெரியுமா?

தள்ளுபடிகள்

பொதுவாக பண்டிகை காலங்களில் பல அசத்தல் தள்ளுபடிகள் வழங்கப்படும். ஏராளமான பொதுமக்கள் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் நிலையில், பல ஆன்லைன் தளங்களில் அட்டகாசமான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இதேபோல கடைகளிலும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனவே ஆன்லைன் தளங்கள் மற்றும் கடைகளை ஒப்பிட்டு எதில் விலை குறைவாக உள்ளது, எந்த இடத்தில் எந்த பொருளுக்கு அதிக சலுகை கிடைக்கிறது என்பதை கணக்கிட்டு வாங்குவது சரியானதாக இருக்கும்.

இதையும் படிங்க : முன்பணம் இல்லாமல் புது கார் வாங்க வேண்டுமா? இதோ எளிய வழி

கிரெடிட் கார்டுகள்

பெரும்பாலான பொதுமக்கள் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், பெரும்பாலான நிறுவனங்கள் குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகளுக்கு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகின்றன. அதுமட்டுமன்றி, கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஷாப்பிங் செய்யும் பட்சத்தில் அதற்கு ரிவார்டு பாயிண்ட்ஸ் மற்றும் பரிசு கூப்பன்களும் கிடைக்கும். இதன் மூலம் குறிப்பிட்ட தொகையை சேமிக்க முடியும்.

மேற்குறிப்பிட்ட இந்த முறைகளை பின்பற்றி தீபாவளி ஷாப்பிங் செய்யும் பட்சத்தில் பட்ஜெட்டில் ஷாப்பிங்கை முடிப்பதோடு கூடுதல் சலுகைகளையும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.