Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

தங்க நகைக்கான விதிமுறைகள் தளர்வு: ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி – என்ன மாற்றங்கள் தெரியுமா?

Gold Loan Rules Eased : இந்திய ரிசர்வ் வங்கி தங்க நகைக் கடனுக்கான விதிகளை தளர்த்தியிருக்கிறது. அதன் படி ரூ.2.5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளுக்கு 85 சதவிகிதம் வரை கடன் பெறலாம் என அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு சிறிய அளவில் கடன் பெறும் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தங்க நகைக்கான விதிமுறைகள் தளர்வு: ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி – என்ன மாற்றங்கள் தெரியுமா?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 07 Jun 2025 18:42 PM

இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India) சமீபத்தில் தங்க நகை கடன் (Gold Loan) பெறுவதற்கான 9 புதிய விதிமுறைகளைஅறிவித்திருந்தது.  இதில் 75 சதவிகிதம் வரை மட்டுமே கடன் வழங்க வேண்டும், தங்கத்தின் தூய்மை சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்பது போன்ற முக்கிய விதிகள் இடம்பெற்றிருந்தன.  இதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கோல்டு லோன் பெறுவது தொடர்பான விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி தளர்த்தியிருக்கிறது.  அதன் படி ரூ. 2.5 லட்சம் வரையிலான கடனுக்கு 85 சதவிகிதம் வரை கடன் பெற அனுமதிக்கப்படுகிறது போன்ற பல அறிவுப்புகள் வெளியாகியிருக்கிறது. இது எளிய மக்கள் தங்க நகைக் கடன் பெறும் எளிய மக்களுக்கு பயனுள்ள வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தங்க நகைக் கடன் பெறும் விதிகளில் தளர்வை அறிவித்த இந்திய ரிசர்வ் வங்கி

முன்பு தங்க நகைக்கு 75 சதவிகிதம் வரை மட்டுமே கடன் வழங்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது வெளியான அறிவிப்பில் இந்த விதி தளர்த்தப்பட்டிருக்கிறது.

  • ரூ. 2.5 லட்சம் வரை பெறப்படும் தங்க நகைக் கடன்களுக்கு 85 சதவிகிதம் வரை கடன் பெற வழங்கப்படுகிறது.
  • ரூ.2.5 லட்சம் வரை கடன்களுக்கு கடன் தகுதி மதிப்பீடு தேவையில்லை.
  • அதே போல ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரையிலான தங்க நகைக்கு 80 சதவிகிதம் வரையும், ரூ. 5 லட்சத்திற்கு மேல் 75 சதவிகிதம் வரையும் கடன் வழங்கப்படும்.
  • தங்க நகைக்கான உடமைக்கு கடன்தாரரின் சுய அறிவிப்பு மட்டுமே போதும். நகைக்கான ரசீது தேவையில்லை.
  • தங்க கடன்களுக்கு விதிகளை மீறி செய்யப்படும் விளம்பரங்கள், போலி வாக்குறுதிகளை வழங்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் .
  • இந்த புதிய விதிமுறைகள் வருகிற 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்க நகைக் கடனுக்கான விதிகள் தளர்த்தப்பட்டிருப்பது குறித்து சு.வெங்கடேசன்

 

ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிவிப்பில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

  • ரூ.2.5 லட்சத்திற்கு மேற்பட்ட கடன்களுக்கு கடனாளரின் திருப்பிச் செலுத்தும் திறனை மதிப்பீடு செய்த பிறகே கடன் வழங்க வேண்டும்
  • மியூச்சுவல் பண்டுகள் போன்றனவற்றுக்கு கடன் வழங்கக்கூடாது.
  • தங்கத்தின் மதிப்பு கணக்கீடு செய்வதற்கு இந்தியா ஜூவல்லர்ஸ் அசோசியேஷன் லிமிடெட் அல்லது இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI)  அங்கீகரித்த  மையங்களில் கடந்த 30 நாட்களின் சராசரி விலையை கொண்டு கணக்கிட வேண்டும்.
  • கடனை முழுமையாக அடைத்த பிறகு நாம் அடகு வைத்த தங்கத்தை 2 ஆண்டுகளுக்கு மேலாக வாங்காமல் இருந்தால் அது ‘unclaimed’ என வகைப்படுத்தப்படும்.
  • கடன் பத்திரங்களில் தங்கத்தின் விலை, மதிப்பு உள்ளிட்டவை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?...
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது..
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது.....
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!...
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!...
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை - பொதுமக்கள் பாதிப்பு!
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை - பொதுமக்கள் பாதிப்பு!...
சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே பயணிகள் ரயில் ரத்து!
சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே பயணிகள் ரயில் ரத்து!...
அரசுப்பள்ளிக்கு பேருந்து நன்கொடை கொடுத்த கிராம மக்கள்
அரசுப்பள்ளிக்கு பேருந்து நன்கொடை கொடுத்த கிராம மக்கள்...
நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்த வந்த கொழுந்தனை தீர்த்துகட்டிய அண்ணி
நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்த வந்த கொழுந்தனை தீர்த்துகட்டிய அண்ணி...
INDவிற்கு எதிரான 1st டெஸ்ட் போட்டிக்கான ENG அணி அறிவிப்பு!
INDவிற்கு எதிரான 1st டெஸ்ட் போட்டிக்கான ENG அணி அறிவிப்பு!...
பிரதமர் மோடியின் குரோஷியா பயணம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?
பிரதமர் மோடியின் குரோஷியா பயணம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?...