AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி!

Gold Price Cut down in Chennai | கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர் உயர்வை சந்தித்து வந்தது. இந்த நிலையில், இன்று (ஜூன் 07, 2025) தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதாவது இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை ரூ.1,200 வரை குறைந்துள்ளது.

Gold Price : ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 07 Jun 2025 10:25 AM IST

சென்னை, ஜூன் 07 : சென்னையில் இன்று (ஜூன் 07, 2025) தங்கம் விலை (Gold Price) அதிரடியாக குறைந்துள்ளது. அதாவது, 22 காரட் தங்கம் இன்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர் உயர்வை சந்தித்து வந்த நிலையில், தற்போது விலை குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.8,980-க்கும், ஒரு சவரன் ரூ.71,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொடர் உயர்வை சந்தித்து வந்த தங்கம் விலை

2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர் உயர்வை சந்தித்து வந்தது. இதன் காரணமாக ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10,000-த்தை தாண்டும் அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவியது. இந்த நிலையில், இன்று (ஜூன் 7, 2025) தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

தொடர் உயர்வுக்கு பிறகு குறைந்த தங்கம் விலை

  • 29 மே, 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.8,895-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.71,160-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 30 மே, 2025 – தங்கம் விலை உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,920-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.71,360-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 31 மே, 2025 – தங்கம் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் தங்கம் ரூ.8,920-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.71,360-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 1 ஜூன், 2025 – தங்கம் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் தங்கம் ரூ.8,920-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.71,360-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 2 ஜூன், 2025 – தங்கம் விலை உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,060-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.72,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 3 ஜூன், 2025 – தங்கம் விலை உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,080-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.72,640-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 4 ஜூன், 2025 – தங்கம் விலை உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,090-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.72,720-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 5 ஜூன், 2025 – தங்கம் விலை உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,130-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.73,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 6 ஜூன், 2025 – தங்கம் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் தங்கம் ரூ.9,130-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.73,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 7 ஜூன், 2025 – தங்கம் விலை குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,980-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.71,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இவ்வாறு கடந்த 10 நாட்களாகவே தங்கம் விலை தொடர் உயர்வை மட்டுமே சந்தித்து வந்த நிலையில், ஒரு கிராம் ரூ.10,000-த்தை தாண்டும் நிலை ஏற்பட்டது. இந்தன் நிலையில், இன்று ஒரே நாளில் தங்கம் அதிரடியாக விலை குறைந்துள்ளது. அதாவது, இன்றைய நிலவரம் படி, தங்கம் கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.8,980-க்கும், ஒரு சவரன் ரூ.71,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us