Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Gold Price : 2 மாதங்களில் 12-15% வரை குறைபோகும் தங்கம் விலை?.. குவான்ட் மியூச்சுவல் ஃபண்ட் கூறுவது இதுதான்!

12-15 Percentage Drop in Gold Price in 2 Months | தங்கம் விலை நாளுக்கு நாள் தொடர் உயர்வை சந்தித்து வரும் நிலையில், அது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இன்னும் இரண்டு மாதங்களில் தங்கம் விலை 12 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை குறைய உள்ளதாக கூறப்படுகிறது.

Gold Price : 2 மாதங்களில் 12-15% வரை குறைபோகும் தங்கம் விலை?.. குவான்ட் மியூச்சுவல் ஃபண்ட் கூறுவது இதுதான்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 05 Jun 2025 12:27 PM

தங்கம் விலை (Gold Price) நாளுக்கு நாள் உயர்ந்துக்கொண்டே வருகிறது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் தங்கம் வாங்க முடியாமலே போய்விடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் உள்ளது. இந்த நிலையில், பொதுமக்களுக்கு மகிழ்ச்சியளிக்க கூடிய வகையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, அடுத்த 2 மாதங்களுக்குள் தங்கம் விலை 10 முதல் 15 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக குவான்ட் மியூச்சுவல் ஃபண்ட் (Quant Mututal Fund) தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தங்கம் விலை குறித்து அந்த நிறுவனம் என்ன கூறியுள்ளது என்பது குறித்து விரிவாக பர்க்கலாம்.

தொடர்ந்து உயரும் தங்கம் விலை

2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை கடும் உயர்வை சந்தித்து வருகிறது. அதாவது 2025 தொடங்கிய ஒருசில மாதங்களிலே தங்கம் விலை சவரன் ரூ.75,000 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளான நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கம் விலை குறைய தொடங்கியது. அதாவது ரூ.75,000 வரை சென்ற தங்கம் விலை அப்படியே படிப்படியாக குறைந்து ரூ.69,000 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது தங்கம் விலை மீண்டும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,040 வரை விற்பனை செய்யப்படுகிறது.

10 நாட்களில் ரூ.2,000 வரை உயர்ந்த தங்கம் விலை

  • 27 மே, 2025 – 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8,995-க்கும், ஒரு சவரன் ரூ.71,960-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 28 மே 2025 – 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8,935-க்கும், ஒரு சவரன் ரூ.71,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 29 மே 2025 – 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8,895-க்கும், ஒரு சவரன் ரூ.71,160-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 30 மே 2025 – 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8,920-க்கும், ஒரு சவரன் ரூ.71,360-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 31 மே 2025 – 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8,920-க்கும், ஒரு சவரன் ரூ.71,360-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 1 ஜூன் 2025 – 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8,920-க்கும், ஒரு சவரன் ரூ.71,360-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 2 ஜூன் 2025 – 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.9,060-க்கும், ஒரு சவரன் ரூ.72,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 3 ஜூன் 2025 – 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.9,080-க்கும், ஒரு சவரன் ரூ.72,640-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 4 ஜூன் 2025 – 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.9,090-க்கும், ஒரு சவரன் ரூ.72,720-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 5 ஜூன் 2025 – 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.9,130-க்கும், ஒரு சவரன் ரூ.73,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சரியாக ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை ஏறுமுகத்தில் உள்ள நிலையில், விரைவில் ஒரு சவரன் ரூ.80,000-த்தை எட்டும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

குவான்ட் மியூச்சுவல் ஃபண்ட் கூறுவது என்ன?

அடுத்த இரண்டு மாதங்களில் தங்கம் விலை டாலர் மதிப்பில் 12 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக குவான்ட் மியூச்சுவல் ஃபண்ட் தெரிவித்துள்ளது. இருப்பினும் தங்கம், நீண்ட கால முதலீட்டுக்கு சிறந்தது என்றும் அது கூறியுள்ளது. குவான்ட் மியூச்சுவல் ஃபண்ட்  மட்டுமன்றி பல்வேறு பொருளாதார வல்லுநர்களும் தங்கம் விலை ஒரு மிகப்பெரிய பிரேக் அவுட் ஏற்படுவதற்காக வாய்ப்பு உள்ளது என்று தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.