AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. இன்றைய விலை நிலவரம் இதுதான்!

Gold and Silver Price Remain Same In Chennai | சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை உயர்ந்த நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.

Gold Price : தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. இன்றைய விலை நிலவரம் இதுதான்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 07 Aug 2026 10:42 AM IST

சென்னை, ஆகஸ்ட் 07 : கடந்த இரண்டு நாட்களாக கடும் விலை உயர்வை சந்தித்து வந்த தங்கம், இன்று (ஆகஸ்ட் 07, 2026) மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் (Gold and Silver Price) எந்தவித மாற்றமுமின்றி, நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம் விலை

2026, ஜூலை மாதம் முதலே தங்கம் வில தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. தங்கம் விலை தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்தாலும், ரூ.13,000 என்ற அடிப்படியிலேயே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் தான், ஆகஸ்ட் 05, 2026 மற்றும் ஆகஸ்ட் 06, 2026 ஆகிய தேதிகளில் தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி விலை உயர்வை சந்தித்தது.

இதையும் படிங்க : Gold : இரண்டு நாட்களில் ரூ.5,000 விலை உயர்வை சந்தித்த தங்கம்.. திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

ஈரான் போர் முடிவுக்கு வரும் தருவாயை எட்டிய நிலையில், தங்கம் இத்தகைய அதிரடி உயர்வை எட்டியது. ஆனால், இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மிகப்பெரிய டிவிஸ்ட் ஏற்பட்டுள்ளது. அதாவது தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று எந்தவித மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று விலையில் மாற்றமின்றி 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.13,750-க்கும், ஒரு சவரன் ரூ.1,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையிலும் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us