AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : மீண்டும் உயர்வை சந்தித்த தங்கம்.. ஒரே நாளில் ரூ.1,200 உயர்வு!

Gold Price Increased 1200 Rupees Per Sovereign | ஜூன் மாதம் முழுவதும் கடும் சரிவை சந்தித்த தங்கம், ஜூலை மாதத்தில் தொடர் உயர்வை சந்திக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், சென்னையில் இன்று 22 காரட் தங்கம் ரூ.1,200 உயர்வை சந்தித்துள்ளது.

Gold Price : மீண்டும் உயர்வை சந்தித்த தங்கம்.. ஒரே நாளில் ரூ.1,200 உயர்வு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 03 Jul 2026 10:48 AM IST

சென்னை, ஜூலை 03 : ஜூன் மாதம் முழுவதும் தொடர் சரிவை சந்தித்து வந்த தங்கம் விலை (Gold Price), ஜூலை மாதம் தொடங்கியது முதல் உயர்வை சந்தித்து வருகிறது. அந்த வகையில், இன்று (ஜூலை 03, 2026) தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்துள்ளது. இதேபோல வெள்ளியும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜூன் மாதம் தொடர் சரிவை சந்தித்த தங்கம்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 2026, பிப்ரவரி மாதம் முதல் கடும் போர் நிலவி வந்த நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. இந்த நிலையில் தான், ஜூன் மாதம் தொடங்கியதும் தங்கம் விலை கடும் சரிவை சந்தித்த தொடங்கியது. ஜூன் மாதம் முழுவதும் தொடர் சரிவையே தங்கம் சந்தித்தது.

இதையும் படிங்க : Gold Price : தொடர் சரிவில் தங்கம் விலை.. காரணம் என்ன?.. மேலும் விலை குறையுமா?

தங்கம் தொடர் சரிவை சந்தித்ததன் காரணமாக ஜனவரி மாதத்தில் ரூ.15,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்பட்ட தங்கம், ஜூன் மாதத்தில் ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே நிலை நீடித்தால் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1 லட்சத்திற்கு கீழ் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தங்கம் திடீரென டிவிஸ்ட் அடித்து மீண்டும் விலை உயர்வை சந்திக்க தொடங்கியுள்ளது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,700-க்கும், சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,09,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.260-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us