AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ. 3,040 குறைந்து விற்பனை..

ஜூன் 18ஆம் தேதி நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 13,950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கம் 1,11,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், ஜூன் 19ஆம் தேதியான இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 13,570 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 1,08,560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ. 3,040 குறைந்து விற்பனை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 19 Jun 2026 10:26 AM IST

ஜூன் 19, 2026: ஜூன் 19ஆம் தேதியான இன்று தங்கம் விலை கடுமையான சரிவை சந்தித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 380 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலையும் கணிசமான சரிவை சந்தித்து, ஒரு கிராம் வெள்ளி 15 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளி வாங்க திட்டமிட்டு இருந்த பொதுமக்கள் மற்றும் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்றைய தினம் சற்று உயர்வைக் கண்ட தங்கம் விலை, இன்று அதிரடியாக சரிந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் 3,040 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், இன்று ஏற்பட்டுள்ள இந்த திடீர் சரிவு நகை சந்தையில் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடுமையாக சரிந்தட தங்கம் விலை:

ஜூன் 18ஆம் தேதி நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 13,950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கம் 1,11,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், ஜூன் 19ஆம் தேதியான இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 13,570 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 1,08,560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளையில், தூய தங்கமாக கருதப்படும் 24 கேரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் 24 கேரட் தங்கம் 14,804 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,18,432 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முதலீட்டு நோக்கில் தங்கம் வாங்குபவர்களும் இந்த விலை சரிவை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: தற்போதைய சூழலில் ரூ.1 லட்சம் இருந்தால் எவ்வளவு தங்கம் வாங்கலாம்?

வெள்ளி விலையைப் பொருத்தவரையில், ஒரு கிராம் வெள்ளி 15 ரூபாய் குறைந்து 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொழில்துறை பயன்பாடு மற்றும் முதலீட்டு தேவைகள் காரணமாக வெள்ளி விலையிலும் கடந்த சில மாதங்களாக குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பதிவாகி வருகின்றன.

ஏற்ற இறக்கத்தில் தங்கம் வெள்ளி விலை:

ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்தே தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் கணிசமாகக் குறைந்து வருகின்றன. இடையில் ஒரு சில நாட்களில் மட்டுமே விலை உயர்வைக் கண்டிருந்தாலும், பெரும்பாலான நாட்களில் விலை சரிவே பதிவாகியுள்ளது. இதனால் திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்காக நகைகள் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் தற்போது சந்தை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

சர்வதேச சந்தை நிலவரங்களும் தங்கம் விலை குறைவதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றன. மத்திய கிழக்கில் நீடித்து வந்த போர் பதற்றம் குறைந்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வம் சற்று குறைந்துள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், உலகளாவிய பொருளாதார சூழல், அமெரிக்க டாலரின் மதிப்பு, கச்சா எண்ணெய் விலை மாற்றங்கள் மற்றும் மத்திய வங்கிகளின் வட்டி விகித கொள்கைகள் போன்ற பல்வேறு காரணிகளும் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

Follow Us