சென்னையில் மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பேருந்து பயணம்.. ஜூன் 21ஆம் தேதி முதல் டோக்கன் விநியோகம்..
அடுத்த ஆறு மாதங்களுக்கான டோக்கன்கள் மற்றும் புதிய அடையாள அட்டைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை வாழ் மூத்த குடிமக்களுக்கு ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம், அடுத்த ஆறு மாதங்களுக்கு பயன்படுத்தக்கூடிய 60 கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூன் 19, 2026: சென்னையில் உள்ள மூத்த குடிமக்கள் மாநகரப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்வதற்கான புதிய டோக்கன்கள் வரக்கூடிய ஜூன் 21ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை விநியோகம் செய்யப்படும் என மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள 39 மையங்களில், விடுமுறை இன்றி அனைத்து நாட்களிலும் இந்த டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதியவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம்:
அடுத்த ஆறு மாதங்களுக்கான டோக்கன்கள் மற்றும் புதிய அடையாள அட்டைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை வாழ் மூத்த குடிமக்களுக்கு ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம், அடுத்த ஆறு மாதங்களுக்கு பயன்படுத்தக்கூடிய 60 கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கான விநியோகம் வரக்கூடிய ஜூன் 21ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள 39 பணிமனைகள் மற்றும் பேருந்து நிலைய மையங்களில் நடைபெறும். முதியவர்களின் வசதிக்காக இந்த மையங்கள் வார இறுதி நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் காலை 8.00 மணி முதல் மாலை 7.30 மணி வரை செயல்படும்.
என்னென்ன ஆவணங்கள் தேவை?
இந்த கட்டணமில்லா பயண டோக்கன்கள் மற்றும் புதிய அடையாள அட்டைகளைப் பெற விரும்பும் முதியவர்கள், அல்லது ஏற்கனவே அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் அதை புதுப்பிக்க விரும்பினால், தங்களது இருப்பிடச் சான்றாக குடும்ப அட்டையையும், வயது சான்றாக ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றையும் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், இரண்டு அண்மைக்கால பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களையும் வழங்கி டோக்கன்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் படிக்க: நண்பனின் தங்கை மீது காதல்.. இளைஞர் அடித்துக் கொலை.. கிணற்றில் வீசப்பட்ட சடலம்.. கோவையில் பயங்கரம்!!
இந்த விநியோக காலக்கெடுவிற்குப் பிறகு, ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை மூத்த குடிமக்கள் தங்களது பகுதிக்கு உட்பட்ட பணிமனை அலுவலகங்களை வழக்கமான அலுவலக நாட்கள் மற்றும் அலுவலக நேரங்களில் மட்டும் அணுகி டோக்கன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெளிவுபடுத்தியுள்ளது.
39 மையங்களில் டோக்கன் விநியோகம்:
அடையாறு, திருவான்மியூர், தீவுத்திடல், சைதாப்பேட்டை, ஐயப்பன்தாங்கல், பல்லாவரம், கே.கே. நகர், வேளச்சேரி, அண்ணா நகர், அம்பத்தூர் எஸ்டேட், ஆவடி, ஐ.சி.எஃப்., சுங்கச்சாவடி, திருவொற்றியூர், எம்.கே.பி. நகர், செங்குன்றம், பூந்தமல்லி பேருந்து நிலையம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், மின்ட் பேருந்து நிலையம், குன்றத்தூர் பேருந்து நிலையம், பெசன்ட் நகர், பட்டினப்பாக்கம், டி.நகர், சைதாப்பேட்டை பேருந்து நிலையம், குரோம்பேட்டை, வடபழனி, ஆதம்பாக்கம், கிண்டி எஸ்டேட், கோயம்பேடு, அம்பத்தூர், அயனாவரம், தண்டையார்பேட்டை, எண்ணூர், மாதவரம், பாடியநல்லூர், தாம்பரம், பெரம்பூர் பேருந்து நிலையம், செம்மஞ்சேரி மற்றும் கிளாம்பாக்கம் ஆகிய பணிமனைகளில் டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.