Gold Price : அதிரடியாக குறைந்தது தங்கம் மற்றும் வெள்ளி.. இன்றைய நிலவரம் என்ன?
Gold and Silver Price In Chennai Today | தங்கம் விலை நாளுக்கு நாள் கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக குறைந்துள்ளது. இன்றைய நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஏப்ரல் 23 : ஈரான் போர் (Iran War) காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold and Silver Price) மிக கடுமையான எற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று (ஏப்ரல் 23, 2026) தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ளது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்த நிலையில், வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஏற்ற, இறக்கங்களை சந்திக்கும் தங்கம் விலை
ஈரான் போர் காரணமாக தங்கம் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக ஈரான், ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மூடிய நிலையில், உலக நாடுகளுக்கு செல்லும் எண்ணெய் கப்பல்கள் தடைபட்டு நின்றது. இதன் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளிட்ட சிக்கல்களை உலக நாடுகள் எதிர்க்கொண்டன.
இதையும் படிங்க : ஊழியர் நோட்டீஸ் பீரியடை கழிக்கவில்லை என்றால் குற்றமா?.. சட்டம் கூறுவது என்ன?




ஈரான் போர் எதிரொலியால் புவிசார் பதற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக உலக முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தயக்கம் காட்டுகின்றனர். இவ்வாறு நிலையற்ற தன்மை நிலவுவதால் தங்கம் விலையும் நிலையில்லாமல் உள்ளது. அந்த வகையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக குறைந்துள்ளது.
10 நாட்களுக்கான தங்கம் விலை
| தேதி | ஒரு கிராம் | ஒரு சவரன் |
| 14 ஏப்ரல் 2026 | ரூ.14,220 | ரூ.1,13,760 |
| 15 ஏப்ரல் 2026 | ரூ.14,320 | ரூ.1,14,560 |
| 16 ஏப்ரல் 2026 | ரூ.14,360 | ரூ.1,14,880 |
| 17 ஏப்ரல் 2026 | ரூ.14,210 | ரூ.1,13,680 |
| 18 ஏப்ரல் 2026 | ரூ.14,360 | ரூ.1,14,880 |
| 19 ஏப்ரல் 2026 | ரூ.14,360 | ரூ.1,14,880 |
| 20 ஏப்ரல் 2026 | ரூ.14,300 | ரூ.1,14,400 |
| 21 ஏப்ரல் 2026 | ரூ.14,300 | ரூ.1,14,400 |
| 22 ஏப்ரல் 2026 | ரூ.14,250 | ரூ.1,14,400 |
| 23 ஏப்ரல் 2026 | ரூ.14,160 | ரூ.1,13,280 |
இதையும் படிங்க : சுகன்யா சம்ரித்தி யோஜனா..பெண் குழந்தைக்கு 21 வயதுக்கு முன்னதாகவே பணத்தை எடுக்க முடியுமா?
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.90 குறைந்து ஒரு கிராம் ரூ.14,160-க்கும், சவரனுக்கு ரூ.720 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.270-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.