AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Tamil Nadu Election Poll Percentage : தமிழகத்தில் பெரிய சர்ப்ரைஸ்… 2 கோடியை நெருங்கும் வாக்குகள்.. 11 மணி நிலவரப்படி 37.56 % வாக்குப்பதிவு

Tamil Nadu Polling percentage: தமிழக சட்டமன்ற தேர்தலில் 11 மணி நிலவரப்படி 37.56 சதவீத வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இது கடந்த 2021 சட்டமன்ற தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும். இதே போல, மாவட்டங்கள் வாரியாகவும் வாக்கப்பதிவு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tamil Nadu Election Poll Percentage : தமிழகத்தில் பெரிய சர்ப்ரைஸ்… 2 கோடியை நெருங்கும் வாக்குகள்.. 11 மணி நிலவரப்படி 37.56 % வாக்குப்பதிவு
தமிழகத்தில் 37.56 சதவீத வாக்குகள் பதிவு
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 23 Apr 2026 12:18 PM IST

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் காலை 7 மணி முதல் சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, வாக்காளர்களும் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இதில், இன்று காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 37.56 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த 9 மணி நிலவரப்படி 17.69 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் அப்போது, சுமார் ஒரு கோடிக்கும் மேலான வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்திருந்தனர். ஆனால், 11 மணி நிலவரப்படி 2 கோடியை 15 லட்சத்து 38,140 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். 3 கோடியே 58 லட்சத்து 5 ஆயிரத்து 152 பேர் மீதம் உள்ளனர். இவர்கள் மாலை 6 மணிக்குள் வாக்களிப்பாளர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 11 மணி நிலவரப்படி 26.29 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இது  கடந்த 2021 சட்டமன்ற தேர்தலுடன் ஒப்படுகையில் சுமார் 11 சதவீதம் வாக்குப்பதிவு அதிகமாகும்.

மேலும் படிக்க: திமுக – தவெகவினர் மோதல்… வாணியம்பாடியில் வாக்குப்பதிவு நிறுத்தம்…!

மாவட்டம் வாரியாக வாக்குப்பதிவு விவரம்

சட்டமன்ற தேர்தலில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 42. 45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 32. 26 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.  சென்னையில் 35.47 சதவீத வாக்குகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 37.17 வாக்குகளும், கோவை மாவட்டத்தில் 18.45 சதவீத வாக்குகளும், அரியலூர் மாவட்டத்தில் 36. 11 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. இதே போல, ஈரோடு மாவட்டத்தில் 41 சதவீத வாக்குகளும், நாமக்கல் மாவட்டத்தில் 41.41 சதவீத வாக்குகளும், சேலம் மாவட்டத்தில் 40.56 சதவீத வாக்குகளும், திருப்பூர் மாவட்டத்தில் 42.45 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.

கட்சி தலைவர்கள் தொகுதியில் வாக்கு சதவீதம்

இதே போல, முதல்வர் மு க ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் 37. 06 சதவீத வாக்குகளும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி தொகுதியான எடப்பாடியில் 39.94 சதவீத வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் 33. 80 சதவீத வாக்குகளும், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் 36.26 சதவீத வாக்குகளும், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 37.24 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.

தென்காசி மாவட்டத்தில் தொகுதி வாரியாக வாக்கு சதவீதம்

தென்காசி சட்டமன்ற தொகுதியில் 35.76 சதவீதமும், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் 36.04 சதவீதமும், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 37.05 சதவீதமும், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் 35.75 சதவீதமும், வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 36.49 சதவீதம் வாக்குகளும் பதிவாகி உள்ளன. மாலை 6 மணிக்குள் இந்த வாக்கு சதவீதம் மேலும் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்கு சதவீதம் முக்கிய வரலாறு படைக்கும் என்று தெரிகிறது.

மேலும் படிக்க: சாக்லேட் கொடுத்து வாக்காளர்களை வரவேற்ற ‘டீனா’ ரோபோ.. 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவையில் புதுமை!!

Follow Us