நகைப்பிரியர்களுக்கு இனிப்பான செய்தி.. சென்னையில் தங்கம் விலை குறைந்தது.. இன்றைய நிலவரம் என்ன?
Gold Price: எனினும், பங்குச்சந்தை மற்றும் உலகப் பொருளாதார மாற்றங்களைப் பொறுத்து இது மீண்டும் மாறக்கூடும். பொதுவாக அட்சய திருதியைப் பண்டிகையின் போது (இந்த ஆண்டு ஏப்ரல் 19-ல் அமைந்தது) தங்கத்தின் தேவை உச்சத்தில் இருக்கும். அந்தத் தேவை தற்போது சற்று குறைந்திருப்பதும், கடைகளில் கூட்டம் சீரானதும் விலை சரிவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
Gold Price Today: கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று இல்லத்தரசிகளுக்கு நிம்மதி தரும் வகையில் சற்று குறைந்துள்ளது. குறிப்பாக, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரை சரிவடைந்துள்ளது. அட்சய திருதியையை ஒட்டிய விற்பனைக்குப் பிறகு தங்கம் விலை சற்றே சரிவைச் சந்தித்துள்ளது நகைப்பிரியர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. சந்தையில் நிலவும் உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் தேவையைப் பொறுத்து இந்த விலை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு – ஊதியம் எவ்வளவு உயரும்?
இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்:
அதன்படி, 22 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 50 குறைந்து ஒரு கிராம் 14,250க்கும், சவரணுக்கு 400 குறைந்து ஒரு சவரன் 1,14,000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அதேசமயம், வெள்ளி விலையில் இன்று மாற்றம் எதுவுமில்லை. அந்தவகையில், சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 275 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2,75,000 ரூபாயக்கும் விற்கப்படுகிறது.
அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு:
சர்வதேச சந்தையில் தங்கம் டாலரிலேயே வர்த்தகம் செய்யப்படுகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடையும் போது, மற்ற நாட்டு நாணயங்களை வைத்திருப்பவர்களுக்கு தங்கம் வாங்குவது செலவு மிகுந்ததாக மாறும். இதனால் தங்கம் வாங்குவது குறைந்து, அதன் விலை இறங்கத் தொடங்கும்.
குறைந்த தேவை:
திருமண சீசன் இல்லாத காலங்களிலோ அல்லது முக்கியமான பண்டிகைகள் முடிந்துவிட்ட காலங்களிலோ தங்கத்தின் தேவை குறைவாக இருக்கும். இத்தகைய நேரங்களில் விலை சற்று குறைய வாய்ப்புள்ளது. இன்று தங்கம் விலை குறைந்திருப்பது நகை வாங்குவோருக்குச் சாதகமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. எனினும், பங்குச்சந்தை மற்றும் உலகப் பொருளாதார மாற்றங்களைப் பொறுத்து இது மீண்டும் மாறக்கூடும்.
பொதுவாக அட்சய திருதியைப் பண்டிகையின் போது (இந்த ஆண்டு ஏப்ரல் 19-ல் அமைந்தது) தங்கத்தின் தேவை உச்சத்தில் இருக்கும். அந்தத் தேவை தற்போது சற்று குறைந்திருப்பதும், கடைகளில் கூட்டம் சீரானதும் விலை சரிவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
இதையும் படிங்க: இந்த அட்சய திருதியைக்கு தங்கத்தில் இப்படி முதலீடு செய்யுங்கள்.. முழு விவரம்!
வெள்ளி விலை ஏன் மாறவில்லை?:
தங்கம் பெரும்பாலும் முதலீட்டு ரீதியாகப் பார்க்கப்படும் அதே வேளையில், வெள்ளி தொழில்துறை பயன்பாட்டிற்கும் (மின்னணு சாதனங்கள், சோலார் பேனல்கள்) அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எனவே, தங்கத்தின் விலையில் ஏற்படும் உடனடி மாற்றங்கள் வெள்ளியில் பிரதிபலிக்காமல், அதன் தேவை சீராக இருப்பதால் விலை மாறாமல் நீடிக்கிறது.