AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அட்சய திருதியை 2026.. தங்கம் வாங்க சிறந்த நாள்.. இன்று ஒரு கிராம் தங்கம் எவ்வளவு தெரியுமா?

Akshaya Tritiya Gold and Silver Price | இன்று அட்சய திருதியை கடைபிடிக்கப்படுகிறது. பொதுவாக அட்சய திருதியை நாளில் பொதுமக்கள் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

அட்சய திருதியை 2026.. தங்கம் வாங்க சிறந்த நாள்.. இன்று ஒரு கிராம் தங்கம் எவ்வளவு தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 19 Apr 2026 11:56 AM IST

சென்னை, ஏப்ரல் 19 : அட்சய திருதியை நாளில் தங்கம் (Gold) வாங்குவது பொதுமக்களின் வழக்கமாக உள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த முறை அமலில் உள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான அட்சய திருதியை இன்று கடைபிடிக்கப்படுகிறது. வழக்கம்போல இந்த ஆண்டும் ஏராளமான மக்கள் தங்கம் வாங்குவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கும் பொதுமக்கள்

இந்திய கலாச்சாரத்தில் தங்கம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் காரணமாக இந்தியர்கள் தங்கத்தை ஒரு முதலீடாக மட்டும் பார்க்காமல், செல்வமாகவும் கருதுகின்றனர். இதன் காரணமாக சுப காரியங்களில் தங்கம் பயன்படுத்துவது உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர். அந்த வகையில், அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது பொதுமக்களிடையே பழக்கமாக மாறியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக இந்த பழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : இந்த அட்சய திருதியைக்கு தங்கத்தில் இப்படி முதலீடு செய்யுங்கள்.. முழு விவரம்!

கடந்த அட்சய திருதியையில் தங்கம் விலை என்ன?

2026-ல் ஏப்ரல் 19-ல் அட்சய திருதியை வந்துள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி அட்சய திருதியை கடைபிடிக்கப்பட்டது. அன்றைய தினம் 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,100-க்கும், 10 கிராம் ரூ.1,12,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,382-க்கும், 10 கிராம் ரூ.1,23,065-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 2025 அட்சய திருதியையில் தங்கம் வாங்கியவர்கள் தற்போது சுமார் 36 சதவீதம் லாபத்தை சந்தித்துள்ளனர்.

இதையும் படிங்க : இனி இபிஎஃப்ஓ தளத்தில் யுஏன் எண் ஆக்டிவேட் செய்ய முடியாது.. வெளியான முக்கிய அறிவுப்பு!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

ஞாயிற்று கிழமை என்பதால் சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றமின்றி நேற்றைய (ஏப்ரல் 18, 2026) விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. அதாவது 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,360-க்கும், ஒரு சவரன் ரூ.1,14,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,665-க்கும், ஒரு சவரன் ரூ.1,25,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராம் ரூ.180-க்கும், கிலோ ரூ.2,80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Follow Us