அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ. 1,280 அதிகரித்து விற்பனை..
Gold And Silver Price: இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,360-க்கும், ஒரு சவரன் ரூ.1,280 உயர்ந்து ரூ.1,06,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,575-க்கும், ஒரு சவரன் ரூ.1,16,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆகஸ்ட் 5, 2026: கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று (ஆகஸ்ட் 5) அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.160 உயர்ந்துள்ள நிலையில், கடந்த இரண்டு நாட்களாக விலை குறைந்து வந்த சூழலில் இந்த திடீர் உயர்வு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் வெள்ளி விலை நிலவரம் என்ன ?
இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,360-க்கும், ஒரு சவரன் ரூ.1,280 உயர்ந்து ரூ.1,06,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,575-க்கும், ஒரு சவரன் ரூ.1,16,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க: தங்கம் அதிகபட்சமாக இவ்வளவு தான் விலை உயரும்.. கணிப்புகள் கூறுவது என்ன?
வெள்ளி விலையைப் பொருத்தவரை, கடந்த ஒரு வாரமாக எந்த மாற்றமும் இல்லாமல் அதிக விலையில் விற்பனையாகி வந்த நிலையில், இன்று ஒரு கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை ஏற்ற இறக்கத்திற்கு காரணம் என்ன?
தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகின்றன. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு, மத்திய வங்கிகளின் கொள்கைகள் மற்றும் உலகளாவிய பொருளாதார சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த விலை மாற்றம் ஏற்பட்டு வருவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க: ரூ.25,000 ஆக மாறும் பிஎஃப் உச்ச வரம்பு.. வெளியான முக்கிய தகவல்.. என்ன தெரியுமா?
மேலும், 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் தங்கம் விலை மீண்டும் உயர வாய்ப்பு உள்ளது என்றும், நீண்டகால முதலீட்டை கருத்தில் கொண்டு தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்றும் சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.