5 ஆண்டுகளுக்குள் ரூ.5 லட்சம் பிஎஃப் பணத்தை எடுத்தவருக்கு ரூ.1.5 லட்சம் வரி.. விதிகள் கூறுவது என்ன?

Employee Provident Fund Organization | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் இருந்து ஊழியர்கள் பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், பணத்தை எடுத்துக்கொள்வது தொடர்பான முக்கிய விதி ஒன்றை தெரிந்துக்கொள்வது முக்கியமாக உள்ளது. அது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

5 ஆண்டுகளுக்குள் ரூ.5 லட்சம் பிஎஃப் பணத்தை எடுத்தவருக்கு ரூ.1.5 லட்சம் வரி.. விதிகள் கூறுவது என்ன?

மாதிரி புகைப்படம்

Published: 

26 Apr 2026 14:50 PM

 IST

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் (EPFO – Employee Provident Fund Organization) இருந்து எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் ஊழியர்கள் மத்தியில் உள்ளது. ஆனால், 5 ஆண்டுகளுக்கு முன்னதாக பிஎஃப் (PF – Provident Fund) கணக்கில் இருந்து ரூ.5 லட்சம் பணத்தை எடுத்த ஊழியர் ஒருவருக்கு ரூ.1.5 லட்சம் வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிஎஃப் பணத்தை எடுக்கும்போது வரி பிடித்தம் செய்யப்படுமா, பிஎஃப் விதிகள் கூறுவது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஊழியர்களுக்கு சிறந்த அம்சமாக உள்ள பிஎஃப்

இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான ஒரு வரப்பிசரசாதமாக உள்ள திட்டம் தான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி. இந்த திட்டத்தில், ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு அந்த தொகை ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் தொடர்ந்து வரவு வைக்கப்பட்டு வரும். இந்த பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் ஊழியர் ஒருவர் சிக்கலை சந்தித்துள்ளார்.

இதையும் படிங்க : தங்கம் Vs மியூச்சுவல் ஃபண்ட்.. 16 ஆண்டுகளில் அதிக லாபம் தந்தது எது?

ரூ.5 லட்சம் பணம் எடுத்தவருக்கு ரூ.1.5 லட்சம் வரி பிடித்தம்

சமீபத்தில் இணையத்தில் வைரலான ரெட்டிட் பதிவு ஒன்றில், தான் பிஎஃப் கணக்கில் இருந்து ரூ.5 லட்சம் பணம் எடுத்த நிலையில் ரூ.1.5 லட்சம் பிடித்தம் செய்யப்பட்டதாக கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் அந்த ஊழியரின் பிஎஃப் கனக்கில் மூன்று ஆண்டுகளில் நிறுவனம் மற்றும் ஊழியரின் பங்களிப்பு என இரண்டு சேர்த்து ரூ.5 பணம் சேர்ந்துள்ளது.

இதையும் படிங்க : LPG , CNG, PNG, LNG – இந்த 4 வகை எரிவாயுக்களில் உள்ள வித்தியாசம்? எது பாதுகாப்பானது?

இந்த நிலையில், அந்த ஊழியர் 5 ஆண்டுகள் முடிவடைவதற்கு முன்னதாகவே தனது பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துள்ளார். பிஎஃப் விதிகளின்படி, ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து பணி செய்யாமல் சேரும் பணம் ஊழியர் வருங்கால வைப்பு நிதியாக கருதப்படாது. இதன் காரணமாக தான் 5 ஆண்டுகளுக்கு முன்பு பணத்தை எடுத்தால் அதற்கு வட்டி விதிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே அந்த ஊழியர் ரூ.5 லட்சம் பணத்தை எடுக்கும்போது ரூ.1.5 லட்சம் பணத்தை வரியாக செலுத்தியுள்ளார்.

Follow Us
சிஇடி தேர்வு எழுத வந்த மாணவிகளின் மூக்குத்தியை அகற்ற சொன்னதால் பரபரப்பு
ஈரானில் அரசியல் அமைப்பில் திடீர் மாற்றங்கள் - என்ன காரணம்?
வெள்ளி விலை சரிவு, தங்கம் மற்றும் எண்ணெய் விலை உயர்வு
அதிக காய்கறி பழங்கள் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயமா? புதிய ஆய்வு சொல்வது என்ன?