AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

CSKvsGT : ருதுராஜுக்கு பதிலாக கேப்டனாக களமிறங்கும் சஞ்சு சாம்சன்? உண்மை என்ன?

IPL 2026 : ஐபில் 2026 தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முக்கிய போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

CSKvsGT : ருதுராஜுக்கு பதிலாக கேப்டனாக களமிறங்கும் சஞ்சு சாம்சன்? உண்மை என்ன?
Csk V Mi
Karthikeyan S
Karthikeyan S | Published: 26 Apr 2026 14:58 PM IST

ஐபில் 2026 தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முக்கிய போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சீசனில் ஏற்கனவே 7 போட்டிகளில் 4 தோல்விகளை சந்தித்துள்ள சிஎஸ்கே அணி, புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் அந்த அணிக்கு கேப்டன் ருதுராஜ் இல்லாதது மேலும் பின்னடைவாக அமையுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

காயம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான பொம்மி, ருதுராஜ் காயம் காரணமாக அடுத்த போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே சிஎஸ்கே அணியில் ஆயுஷ் மாத்ரே உள்ளிட்ட வீரர்கள் காயம் காரணமாக விலகிய நிலையில் தற்போது ருதுராஜும் விலகியுள்ளதாக கூறப்படும் தகவல்கள் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய கேப்டன் யார்?

ருதுராஜ் இல்லாத நிலையில், சஞ்சு சாம்சன் அந்த அணியின் கேப்டனாக வழி நடத்துவார் என்று கூறப்படுகிறது. இந்த போட்டியை அவர் தோனி போல கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும் செயல்பாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எம்.எஸ் தோனி இந்த போட்டியில் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. காயம் காரணமாக அவர் விளையாடாமல் இருந்த நிலையில் தற்போது முழு தகுதியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் அவர் விளையாடாதது ரசிகர்களை ஏமாற்றத்தை சந்தித்து வருகிறது.

ஏற்கனவே ஆயுஷ் மாத்ரே காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறிய நிலையில் தற்போது ருதுராஜ் கெய்க்வாட்டும் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் ருதுராஜ் இதுரவை மொத்தமா 107 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள நிலையில் அவரது சராசரி 15க்கும் குறைவாக உள்ளது. ஆனால் கேப்டன்சியை பொறுத்தவரை அவர் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார்.

Follow Us