AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தேர்தலின்போது விபத்தில் சிக்கும் வாகனங்களுக்கு யார் பொறுப்பு? நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Accident During Election Duty: இந்தியாவில் 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தும் வாகனங்கள் விபத்தில் சிக்கினால் அதற்கு யார் பொறுப்பு என்ற கேள்விக்கு உச்ச நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தேர்தலின்போது விபத்தில் சிக்கும் வாகனங்களுக்கு யார் பொறுப்பு? நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 04 Apr 2026 15:57 PM IST

இந்தியாவில் தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் ஒரு பக்கம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றொரு பக்கம், தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளில் பரபரப்பாக இயங்கி வருகின்றனர். வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் வழங்குவதை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் தேர்தல் பணிக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் விபத்துக்குள்ளானால் அதற்கு யார் பொறுப்பு என்ற கேள்விக்கு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது.

தேர்தலுக்காக பயன்படுத்தும் வாகனங்கள் விபத்தில் சிக்கினால் யார் பொறுப்பு?

இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களின்போது அரசு அதிகாரிகள் தனியார் வாகனங்களை தேர்தல் பணிக்காக பயன்படுத்துவது ஒரு வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்ல வாகனங்களை அதிகாரிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இவ்வாறு பயன்படுத்தப்படும் வாகனங்கள் விபத்தில் சிக்கினால் அதற்கு யார் பொறுப்பு என்ற கேள்வி நீண்ட காலமாக குழப்பத்தை ஏர்படுத்தி வருகிறது. இது தொடர்பான வழக்கு ஒன்றில் முக்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.

இதையும் படிக்க : தபால் வாக்குகளை கையாள புதிய யுக்தி… திருச்சியில் அமைந்தது சிறப்பு மையம்!

அதன் படி நீதிபதிகள் சஞ்சய் கரோல், என் கோடீஸ்வர் சிங் ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒரு தனியார் வாகனம் அரசால் பொதுப்பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டால், அந்த காலத்தில் ஏற்படும் விபத்துகளுக்கா பொறுப்பு காப்பீடு நிறுவனங்களுக்கு இல்லை எனவும், வாகனத்தை பயன்படுத்தியே அரசுக்கே உள்ளதாகவும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு தேர்தல் பணிக்காக மாவட்ட நிர்வாகம் பயன்படுத்திய ஒரு பள்ளி பேருந்து, பைக் மீது மோதி ஒருவர் உயிரிழந்தார் ஆரம்பத்தில் இந்த விபத்தக்கான இழப்பீடை காவல்துறை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது. பின்னர் இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், உயிரிழந்தவருக்கு வழங்கும் இழப்பீட்டு தொகையை அதிகரித்ததுடன், அதற்கான பொறுப்பை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கியது. இந்த தீர்ப்பை தான் உச்சநீதிமன்றமும் உறுதிபடுத்தியுள்ளது.

இதையும் படிக்க :தேர்தல் இலச்சினையான எறும்புத் தின்னிகள்- நாமக்கல் முட்டை… வித்தியாசமான தேர்தல் விழிப்புணர்வு…!

வாகனம் அரசால் பயன்படுத்தப்படும்போது அதன் முழு கட்டு்பாடு அரசுக்கு செல்கிறது. அந்த காலகட்டத்தில் வாகன உரிமையாளருக்கு எந்த வகையிலும் கட்டுப்பாடு இருக்காது. எனவே விபத்து ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பும் அரசுக்கே உள்ளது. என்று நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.  வாகன காப்பீடு என்பது வாகன உரிமையாளர்களின் பயன்பாட்டுக்காக உருவாக்கப்படுகின்றன. அரசு கட்டுப்பாட்டில் வாகனம் இருக்கும்போது காப்பீடு செல்லுபடியாகாது என்றும் நீதிமன்றம் தெளிபடுத்தியது.

Follow Us