AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஏப்ரல் 14 முதல் 19 வரை.. 4 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை.. செக் பண்ணுங்க!

4 Days Holidays Declared For Banks | அரசு விடுமுறை, பண்டிகைகளின் போது வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படும். அந்த வகையில், ஏப்ரல் 14, 2026 முதல் ஏப்ரல் 19, 2026 வரை மொத்தம் 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 14 முதல் 19 வரை.. 4 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை.. செக் பண்ணுங்க!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 Apr 2026 13:35 PM IST

இந்தியாவில் அரசு விடுமுறை, பொது விடுமுறை மற்றும் பண்டிகைகள் காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். இது தவிர வார விடுமுறையும் வழங்கப்படும். இந்த நிலையில் தான் ஏப்ரல் 14, 2026 முதல் ஏப்ரல் 19, 2026 வரையிலான காலக்கட்டத்தில் மொத்தம் நான்கு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது அந்த 4 நாட்கள் வங்கிகள் செயல்படாது. எனவே எந்த எந்த நாட்கள் வங்கிகள் செயல்படாது, வங்கிகள் செயல்படாதபோது வங்கி சேவைகளை பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஏப்ரல் 14, 2026 – ஏப்ரல் 19, 2026 – 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை

ஏப்ரல் 13, 2026 முதல் ஏப்ரல் 19, 2026 வரை என மொத்தம் 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 14, 2026 – செவ்வாய் கிழமை

அம்பேத்கர் ஜெயந்தி மற்றும் தமிழ் புத்தாண்டு என்பதால் அன்றைய தினம் சென்னை, மும்பை, கொல்கத்தா, அகர்தலா, அகமதாபாத், பெலாபூர், புவனேஸ்வர், டேராடூன், காங்டாக், குவஹாத்தி,  ஹைதராபாத், இம்பால், ஜெப்பூர், ஜம்மு, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், பனாஜி, பாட்னா, ராஞ்சி, திருவனந்தபுரம், விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : உங்கள் உறவுகளின் ஜிபே கணக்கில் நீங்கள் பணம் செலவு செய்யலாம்.. அசத்தலாக அறிமுகமான பாக்கெட் மணி அம்சம்!

ஏப்ரல் 15, 2026 – புதன் கிழமை

போஹேலா பைசாக், ஹிமாச்சல தினம் மற்றும் பிஹு பண்டிகையை முன்னிட்டு அகர்தலா, பெலாபூர், புவனேஸ்வர், சென்னை, டேராடூன், காங்டாக், குவஹத்தி, ஹைதராபாத், இம்பால், இட்டாநகர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், பனாஜி, பாட்னா, ராஞ்சி, சிம்லா, ஸ்ரீநகர், திருவனந்தபுரம், விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 16, 2026 – வியாழக்கிழமை

போஹாக் பிஹு பண்டிகையை முன்னிட்டு இட்டாநகர், கொச்சி, திருவனந்தபுரம், கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 60% ஆக உயர்ந்த இந்தியாவின் உள்நாட்டு கேஸ் சிலிண்டர் உற்பத்தி.. மத்திய பெட்ரோலிய துறை தகவல்!

ஏப்ரல் 19, 2026 – ஞாயிற்றுக்கிழமை

வழக்கமாக ஞாயிற்று கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் நிலையில், ஏப்ரல் 19, 2026 அன்றும் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us