AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உங்கள் உறவுகளின் ஜிபே கணக்கில் நீங்கள் பணம் செலவு செய்யலாம்.. அசத்தலாக அறிமுகமான பாக்கெட் மணி அம்சம்!

New Feature In G Pay | ஜிபே செயலியை இந்தியாவில் உள்ள ஏராளமான மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், பயனர்களின் நலனுக்கான ஜிபேவில் அட்டகாசமான அம்சம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நண்பர்கள், உறவினர்களுக்கு பணம் கொடுக்கும் பாக்கெட் மணி அம்சம் தான் அது.

உங்கள் உறவுகளின் ஜிபே கணக்கில் நீங்கள் பணம் செலவு செய்யலாம்.. அசத்தலாக அறிமுகமான பாக்கெட் மணி அம்சம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 11 Apr 2026 19:03 PM IST

இந்தியாவில் ஏராளமான மக்கள் பயன்படுத்தும் மிக முக்கிய யுபிஐ (UPI – Unified Payment Interface) செயலியாக ஜிபே (G Pay) உள்ளது. விரைவாக பணம் அனுப்புவது, மொபைல் மற்றும் டிவி ரீச்சார்ஜ், கட்டணங்கள் என அனைத்திற்குமான செயலியாக இது உள்ளது. இத்தகைய அசத்தலான அம்சங்களை கொண்ட இந்த செயலியை இந்திய மக்கள் பரவலாக பயன்படுத்துகின்றனர். இத்தகைய முக்கிய செயலியாக ஜிபே உள்ள நிலையில், அதில் ஒரு அசத்தல் அம்சம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பாக்கெட் மணி என்ற அம்சத்தை தான் ஜிபே அறிமுகம் செய்துள்ளது. அது என்ன அம்சம், அதில் உள்ள சிறப்புகள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜிபே செயலியில் அறிமுகமான பாக்கெட் மணி அம்சம்

முன்பெல்லாம் குடும்ப உறுப்பினர்கள் பணம் கேட்டால் அவர்கள் அனுப்பும் QR (QR – Quick Response) கோடுக்கோ அல்லது அவர்களது ஜிபே எண்ணுக்கோ தான் அனுப்ப முடியும். ஆனால், இனி அதற்கான அவசியம் இல்லை. காரணம், ஜிபேயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பாக்கெட் மணி அம்சத்தின் மூலம் உங்கள் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் அவர்களுக்கு தேவையான பணத்தை அவர்களே உங்கள் வங்கி கணக்கில் இருந்து செலவு செய்துக்கொள்ள முடியும்.

இதையும் படிங்க : ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – வங்கி வெளியிட்ட எச்சரிக்கை

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பணம் தேவைப்படும்போது நீங்கள் மற்றொருவருக்கு அனுப்பாமல் அந்த நபரே உங்கள் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்குவது தான் இந்த சிறப்பு அம்சம். இந்த அம்சத்தில் அதிகபட்சமாக 5 பாக்கெட் மணி கணக்குகளை மட்டுமே உருவாக்க முடியும். அந்த கணக்குகளுக்கும் அதிமபட்சமாக ரூ.15,000 மட்டுமே வழங்க முடியும். இந்த பாக்கெட் மணி அம்சத்தில் வங்கி கணக்கு வைத்திருப்பவரின் அனுமதியை பெற்றும் அவரது அனுமதி இல்லாமலும் பணத்தை செலவு செய்ய முடியும்.

பாக்கெட் மணி அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

  1. முதலில் கூகுள் பே செயலியை திறக்க வேண்டும். பிறகு, புரொபைல் மெனுவில் உள்ள UPI Circle என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  2. அப்போது Set Up Pocket Money என தோன்றும் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
  3. பிறகு பாக்கெட் மணி அம்சத்தில் நீங்கள் யார் யாரை இணைக்க விரும்புகிறீர்களோ அவர்களின் மொபைல் நம்பரை பதிவிட வேண்டும். இந்த அம்சத்தை பயன்படுத்த அந்த நபர் கூகுள் பே செயலி வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது.
  4. பிறகு முதன்மை பயனர், இரண்டாம் நிலை பயனரின் UPI Circle QR குறியீட்டை ஸ்கேன் செய்து, மேலே சொன்ன இரண்டு முறைகளில் முழு அதிகாரம் அல்லது அனுமதி முறை என அது வேண்டுமோ அதனை தேர்வு செய்துக்கொள்ளலாம்.
  5. ஒருவேளை நீங்கள் முழு அதிகார முறையை தேர்வு செய்கிறீர்கள் என்றால் மாதாந்திர செலவு வரம்பை நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும், பாதுகாப்புக்காக அந்த நபரின் உறவுமுறை மற்றும் அரசின் அடையாள ஆவணங்களைம்யும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  6. இதன் பிறகு இறுதியாக அழைப்பு அனுப்பப்பட்டு, முதன்மை பயனர் தனது யுபிஐ பின்னை உள்ளிட்டு அதனை உறுதி செய்ய வேண்டும்.

இதையும் படிங்க : நெருங்கும் அட்சய திருதியை – நகைக் கடைகள் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் தந்திரங்கள்

இந்த பாக்கெட் மணி அம்சத்தில் பணம் செலுத்துவது எப்படி?

  • ஒருமுறை பாக்கெட் மணி அம்சத்தில் இணைக்கப்பட்ட பின்னர், இரண்டாம் நிலை பயனர் நேரடியாக கடைகளில் உள்ள கியூஆர் கோடு ஸ்கேன் செய்து பணம்  அனுப்புவது, ஆன்லைன் பண பரிவர்த்தனை மெற்கொள்வது ஆகியவற்றை செய்யலாம்.
  • ஆன்லைன் தளங்களிலும் இந்த பாக்கெட் மணி அம்சத்தை பயன்படுத்தி பணம் செலுத்த முடியும்.
  • அதிலும் குறிப்பாக முழு அதிகாரம் கொடுக்கப்பட்ட நபர் உடனடியாக பணம் செலுத்திக்கொள்ளலாம். இதுவே அனுமதி பெற வேண்டிய வகையில் இணைக்கப்பட்டு இருந்தால் முதன்மை கணக்காளரின் அனுமதியை பெற்று தான் பணம் செலுத்த முடியும்.

தற்போதைய நிலவரப்படி கியூஆர் கோடு, போன் நம்பர் மற்றும் ஆன்லைன் பேமெண்டுகளுக்கு மட்டுமே இந்த வசதி உள்ளது. பில் பேமெண்ட் மற்றும் மொபைல் ரீச்சார்ஜுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us