AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விரைவில் நிலவின் மீது மோத உள்ள ராக்கெட்.. என்ன நடக்கும்?.. விஞ்ஞானிகள் கூறும் முக்கிய தகவல்கள்!

Rocket To Hit Moon Soon | 2015 ஆம் ஆண்டு ஸ்பேஸ் எக்ஸ் மூலம் விண்வெளிக்கு அனுப்பட்ட ராக்கெட் ஒன்று அங்கேயே சிக்கிக்கொண்டது. இந்த நிலையில், நிலவை சுற்றி வரும் அது ஆகஸ்ட் 05, 2026 அன்று நிலவின் மீது மோத உள்ளது.

விரைவில் நிலவின் மீது மோத உள்ள ராக்கெட்.. என்ன நடக்கும்?.. விஞ்ஞானிகள் கூறும் முக்கிய தகவல்கள்!
கோப்பு புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 03 May 2026 07:42 AM IST

நியூயார்க், மே 03 : பூமியை சுற்றி வரும் ராக்கெட் ஒன்று விரைவில் நிலவின் மீது மோத உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். 2015 ஆம் ஆண்டு எலான் மஸ்கின் (Elon Musk) ஸ்பேக் எக்ஸ் (Space X) நிறுவனம் அனுப்பி வைத்த ராக்கெட்டின் மேல் பகுதி, பூமிக்கு திரும்பாமல் விண்வெளியிலேயே சிக்கிக்கொண்ட நிலையில், தற்போது இந்த மோதல் நடைபெற உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த நிலையில், ராக்கெட் நிலவு மீது மோதுவது குறித்து விஞ்ஞானிகள் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

2015 ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்ட ராக்கெட்

ஆய்வு பணிகளுக்காக விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகள், விண்கலங்களை இலக்கு பகுதியில் விட்டுவிடும். அவ்வாறு விண்கலங்களை விட்டுவிடும் ஒருசில ராக்கெட்டுகள் அங்கேயே எரிந்து சாம்பலாகிவிடும். விண்வெளியில் தேவை இல்லாமல் குப்பைகள் சேறுவதை தவிர்க்க இந்த முறை உதவியாக இருக்கும். 2015 ஆம் ஆண்டு எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் இருந்து பால்கன் ரக ராக்கெட் ஒன்று நாசாவின் (NASA – National Aeronautics and Space Administration) விண்வெளி மையத்தில் இருந்து 2 லேண்டர்களுடன் நிலவுக்கு புறப்பட்டு சென்றது.

இதையும் படிங்க : துப்பாக்கிச்சூடு.. நூலிழையில் தப்பித்த ட்ரம்ப்.. அமெரிக்காவில் பரபரப்பு!

சூரியனை புகைப்படம் எடுத்த பிறகு செயலிழந்த லேண்டர்

இந்த இரண்டு லேண்டர்களும் விண்வெளியை அடைந்த நிலையில், ஒரு லேண்டர் நிலவின் மீது மோதியது. மற்றொரு லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது. இந்த லேண்டர் இரண்டு வாரங்கள் செயல்பட்டு நிலவில், சூரியன் மறைவதை புகைப்படம் எடுத்து அனுப்பியது. எனினும் சூரியன் மறைந்ததால் அது செயலிழந்தது. இந்த நிலையில், லேண்டரை இறக்கிவிட்ட அந்த ராக்கெட்டின் மேல் பகுதி விண்வெளியிளே சிக்கிக்கொண்டது.

இதையும் படிங்க : இந்தியாவை ஒரு நாகரிகமாகவே பாருங்கள் – ஐஐடி மாநாட்டில் சத்குரு பேச்சு

ஆகஸ்ட் 5 ஆம் தேதி நிலவின் மீது மோதும் ராக்கெட்

இந்த ராக்கெட் குறித்து விஞ்ஞானிகள் தொடர் சோதனைகளை மேற்கொண்டு வந்த நிலையில், அது தற்போது நிலவின் மீது மோத உள்ளதாக கூறியுள்ளனர். ஆகஸ்ட் 05, 2026 அன்று மதியம் சரியாக 1.14 மணிக்கு அந்த ராக்கெட் நிலவின் மீது மோதும் என்று கூறப்பட்டுள்ளது. அப்போது அந்த ராக்கெட் மணிக்கு 8,700 கிலோ மீட்டர் அல்லது 7 மடங்கு வேகத்தில் இயங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் யாருக்கும் அச்சுறுத்தல்கள் இல்லை என்று கூறியுள்ள விஞ்ஞானிகள் இனி வரும் காலங்களில் விண்வெளியில் குப்பைகள் சேராமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Follow Us