தள்ளாடும் பொருளாதாரம்.. உலக நாடுகளை உதவிக்கு அழைப்பு.. கதிகலங்கும் பாகிஸ்தான்!
India Pakistan Conflict : பாகிஸ்தான் கடும் அழிவுகளை சந்தித்து வருவதாகவும், இதில் இருந்து மீண்டு வரை உல நாடுகள் நிதியுதவி செய்யுமாறு பாகிஸ்தான் அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு முறை தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, அங்கு பொருளதார சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கிறது.

பாகிஸ்தான், மே 09 : பாகிஸ்தான் கடும் அழிவுகளை (Pakistan Economic Crisis) சந்தித்து வருவதாகவும், இதில் இருந்து மீண்டு வரை உல நாடுகள் நிதியுதவி செய்யுமாறு பாகிஸ்தான் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை அறிவிப்பை தனது எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டதை அடுத்து, எக்ஸ் கணக்கு முடக்கப்பட்டதாக பாகிஸ்தானின் பொருளாதார விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு (india Pakistan conflict) எதிராக இரண்டு முறை தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, அங்கு பொருளதார சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கிறது. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடிய இந்தியா அதிரடி நடவடிக்கையை எடுத்தது.
தள்ளாடும் பொருளாதாரம்
அதாவது, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் 2025 மே 7ஆம் தேதி இரவு பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் ஆக்கிரமிப்பு பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிகிறது. இந்த ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியாக பாகிஸ்தான் 2025 மே 8ஆம் தேதியான இரவு 9 மணியளவில் தாக்குதலை நடத்தியது.
ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் உள்ள எல்லை பகுதிகளில் 15 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இதனை உற்று நோக்கிய இந்தியா, இந்திய எல்லைக்குள் வர விடாமல், ட்ரோன்களை சரியான நேரத்தில் சுட்டு வீழ்த்தியது.
இதுபோன்று 50க்கும் மேற்பட்ட ட்ரோன்களை எஸ் 400 என்ற பாதுகாப்பு ஆயுதம் மூலம் தடுத்து நிறுத்தியது. இதன் மூலம், பெரும் இழப்பு தவிர்க்கப்பட்டது. இதனால், இருநாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக, இரண்டு நாட்கள் தாக்குதலில் பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசமடைந்துள்ளது. சர்வதேச நாடுகளை நம்பும் நிலை பாகிஸ்தானுக்கு வந்துள்ளது.
உலக நாடுகளை உதவிக்கு கோரிய பாகிஸ்தான்
Official account of the Ministry of Economic Affairs, Economic Affairs Division – Government of Pakistan posts a tweet, “Govt of Pakistan appeals to International Partners for more loans after heavy losses inflicted by enemy. Amid escalating war and stocks crash, we urge… pic.twitter.com/sPQ4HgL4UW
— ANI (@ANI) May 9, 2025
ஏற்கனவே, பாகிஸ்தானில் பொருளாதார பிரச்னை தலைவிரித்தாடும் நிலையில், இந்தியாவின் தாக்குதலால், அந்நாட்டின் பொருளாதார சரிந்துள்ளது. மேலும், பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், பொருளாதார உதவியை பாகிஸ்தான் உலக நாடுகளிடம் கேட்டுள்ளது. அதாவது, பாகிஸ்தானின் பொருளாதார விவகார அமைச்சகம் தனது எக்ஸ் தளத்தில் உலக நாடுகளுடன் உதவியை கோரியது.
அதாவது, “எதிரிகளால் ஏற்பட்ட பெரும் இழப்புகளுக்குப் பிறகு, பாகிஸ்தான் அரசு சர்வதேச நாடுகளிடம் கடன் உதவியை கோருகிறது. அதிகரித்து வரும் போர் பதற்றத்தால் பங்குச் சந்தை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால், சர்வதேச நாடுகள் எங்களின் பொருளாதார நெருக்கடியை குறைக்க உதவ வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்” என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்து வரும் மோதலில் பாகிஸ்தான் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளது தெளிவாக தெரிகிறது. இதனை பதிவிட்ட சில மணி நேரத்திலேயே, எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக பாகிஸ்தான் கூறுயுள்ளது. மேலும், இந்த ட்வீட்டிற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளதாக தெரிகிறது.