Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விரைவான பொருளாதார வளர்ச்சியை கொண்ட நாடாக இந்தியா உள்ளது.. பிரதமர் மோடி பெருமிதம்!

PM Modi Speech In Muscat | இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், இறுதியாக ஓமன் சென்றார். அங்கு இந்திய வம்சாவளி மக்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். அதற்கு முன்னதாக இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார ஒப்பந்தம் கையெழுத்தானது.

விரைவான பொருளாதார வளர்ச்சியை கொண்ட நாடாக இந்தியா உள்ளது.. பிரதமர் மோடி பெருமிதம்!
பிரதமர் மோடி
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 19 Dec 2025 07:52 AM IST

மஸ்கட், டிசம்பர் 19 : இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi) மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் ஜோர்டன் (Jordan) நாட்டுக்கு சென்ற பிரதமர் அதற்கு அடுத்து எத்தியோப்பாவுக்கும் (Ethiopia) பிறகு ஓமனுக்கும் (Oman) பயணம் மேற்கொண்டார். டிசம்பர் 17, 2025 அன்று ஓமன்  சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. குறிப்பாக அந்த நாட்டின் துணை பிரதமர் சயீத் ஷிஹாப் பின் தாருக் அல் விமான நிலையல்த்திற்கு நேராக சென்று பிரதமரை வரவேற்றார்.

ஓமன் சுல்தானை சந்தித்து பேசிய பிரதமர் மோடி

உற்சாக வரவேற்புடன் ஓமன் சென்ற பிரதமர் மோடி, அந்த நாட்டின் சுல்தான் ஹைதம் பின் தாரீக்கை நேற்று (டிசம்பர் 18, 2025) சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து இருவரும் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான விரிவான பொருளாதார நல்லுநரவு ஒப்பந்தம் இயற்றப்பட்டது.

இதையும் படிங்க : நீச்சல் உடையில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான்.. ஹங்கேரியில் நூதன கொண்டாட்டம்!

இரு நாட்டு தலைவர்களும் கையெழுத்திட்டு இந்த ஒப்பந்தத்தை உறுதி செய்துள்ளனர். மேலும், வர்த்தகம், எரிசக்தி, கடல்சார் பாதுகாப்பு மற்றும் மக்கள் – மக்களுடனான உறவு ஆகியவற்றில் வலுவான ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய கூட்டு அறிக்கை ஒன்றும் இரு நாடுகள் சார்பாக வெளியிடப்பட்டது.

ஒப்பந்தம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர்

இந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர்

இதனை தொடர்ந்து இந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, சில நாட்களுக்கு முன்பு பொருளாதார வளர்ச்சி தொடர்பான தகவல் வெளியானது. அதில், இந்தியாவின் வளர்ச்சி 8 சதவீதத்திற்கும் மேல் உள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. உலக நாடுகள் சவால்களை சந்தித்த போதும், இந்தியா தொடர்ந்து விரைவான பொருளாதார வளர்ச்சியை கொண்ட நாடாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

ஆண்டின் தொடக்கத்தில் இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்கா கடுமையான வரிகளை விதித்தது உள்ளிட்ட உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் இருந்தபோதிலும், இந்த வளர்ச்சியை இந்தியா அடைந்துள்ளது. செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 8.2 சதவீதம் என்ற அளவில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விரிவடைந்து இருந்தது. இது அதற்கு முந்தின காலாண்டில் 7.8 சதவீதம் என்ற அளவில் இருந்தது என்று அவர் கூறியுள்ளார்.