கிறிதுமஸ் பண்டிகையின் போது கிறிஸ்துமஸ் மரங்கள் வைக்கப்படுவது ஏன்?.. உங்களுக்கு தெரியுமா?
Why Christmas Tree Takes Crucial Part in Christmas | கிறிஸ்துமஸ் பண்டிகை வந்துவிட்டாலே வீடுகள், வீதிகள் என அனைத்து இடங்களிலும் வண்ண விலக்குகளுடன் கிறிஸ்துமஸ் மரங்களும் இருக்கும். இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கிறிஸ்துமஸ் மரம் வைக்க என்ன காரணம் என தெரியுமா?
டிசம்பர் 25, 2025 அன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் (Christmas) பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சரியாக 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், கொண்டாட்டங்களும் கலைக்கட்ட தொடங்கியுள்ளன. கிறிஸ்துமஸ் பண்டிகையில் மிக முக்கிய அம்சமாக உள்ளது தான் கிறிஸ்துமஸ் மரம் (Christmas Tree). இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கிறிஸ்துமஸ் மரம் ஏன் வைக்கப்படுகிறது, அந்த பழக்கம் எப்போது முதல் தொடங்கியது என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா?. அது குறித்து பார்க்கலாம்.
கிறிஸ்துமஸ் பண்டிகையில் முக்கிய பங்கு வகிக்கும் கிறிஸ்துமஸ் மரம்
கிறிஸ்துமஸ் என்பது கிறிஸ்துவர்களின் பண்டிகை மட்டுமன்றி, அது சமத்துவத்தையும், அன்பையும் வெளிப்படுத்தும் ஒரு பண்டிகையாக உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை ஜெபங்கள், ஊர்வலங்கள், சிறப்பு விருந்துகள் என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. அவற்றில் மிக முக்கியமான, கிறிஸ்துமஸ் பண்டிகையை உணர்த்தும் ஒன்று தான் கிறிஸ்துமஸ் மரம். ஆனால், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கிறிஸ்துமஸ் மரம் ஏன் வைக்கப்படுகிறது என பலருக்கும் தெரியாமல் உள்ளது.
இதையும் படிங்க : அமெரிக்காவை தொடர்ந்து அதிர்ச்சி கொடுத்த மெக்சிகோ.. இந்தியா மீது 50% வரி விதித்தது!




நூற்றாண்டுகளாக பின்பற்றபப்டும் கிறிஸ்துமஸ் மரம் கலாச்சாரம்
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கிறிஸ்துமஸ் மரம் வகைக்கும் கலாச்சாரம் பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்படுகிறது. பல்வேறு மரபுகளில் இருந்து வழி வழியாக வந்த ஒரு நடைமுறை தான் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கிறிஸ்துமஸ் மரம் வைப்பது. கிறிஸ்துமஸ் மரம் நம்பிக்கை, வாழ்க்கை மற்றும் அதன் தொடர்ச்சியை குறிக்கிறது. கடும் குளிரின்போது மரங்கள் பசுமை செழித்து இருக்கும் நிலையில், அதனை உணர்த்தும் விதமாக கிறிஸ்துமஸ் மரங்கள் உள்ளன.
ஒற்றுமையை உணர்த்தும் கிறிஸ்துமஸ் மரம்
கிறிஸ்துமஸ் மரம் ஒற்றுமையை உணர்த்தும் விதமாகவும் பார்க்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஒரு வீட்டில் உள்ள குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் இணைந்து அந்த கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கறிப்பர். இதன் காரணமாக அந்த கிறிஸ்துமஸ் மரம் வெறும் அலங்காரமாக மட்டும் அல்லாமல், நம்பிக்கை, பாரம்பரியம், நினைவுகள் ஆகியவற்றின் கலவையாக இருக்கும்.
இதையும் படிங்க : விமான பாணியாளருக்கு திடீர் உடல்நல சிக்கல்.. விரைந்து செயலாற்றி உயிரை காப்பாற்றிய தமிழக மருத்துவர்கள்!
பண்டைய கால பழக்கம்
பண்டைய கால எகிப்தியர்கள், சீனர்கள் மற்றும் ஹீப்ரூக்கள் மரங்களை நிலையான வாழ்வின் ஆதாரமாக கருதினர். ஐரோப்பியர்களிடையே மரங்களை வழிபடும் பழக்கமும் இருந்துள்ளது. பனி காலத்தில் வீடுகளை கடும் குளிரில் இருந்தும், தீய சக்திகளிடம் இருந்தும் பாதுகாப்பதற்காக அவர்கள் மரங்களின் கிளைகளை பயன்படுத்தியுள்ளனர். இவ்வாறு மனிதர்களின் வாழ்வியலோடு மரங்கள் முக்கிய பங்கு வகித்த நிலையில், செழுமையான வாழ்வுக்கு அவை மிகவும் அவசியம் என்பதால் அது அப்படியே பழக்கமாக மாறியுள்ளது.