Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கனடாவில் இருந்து இந்தியர்கள் அதிகளவு வெளியேற்றம்…என்ன காரணம்!

Indians Deported From Canada: கனடா நாட்டில் இருந்து இந்த ஆண்டு மட்டும் அதிக அளவிலான இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதற்காக தயார் செய்யப்பட்ட பட்டியலில் இந்தியர்கள் முன்னிலை வகிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளி வந்துள்ளது. இந்த நடவடிக்கை எதற்காக என்பதை பார்க்கலாம்.

கனடாவில் இருந்து இந்தியர்கள் அதிகளவு வெளியேற்றம்…என்ன காரணம்!
கனடாவில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றம்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 11 Dec 2025 10:46 AM IST

கனடா நாட்டில் வசித்து வரும் இந்தியர்கள் இந்த ஆண்டில் அதிக அளவில் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, கடந்த 2024 புள்ளி விவரங்களுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை அதிகமாகும். இது தொடர்பாக கனடா எல்லை சேவைகள் நிறுவனம் வெளியிட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில், 2025- ஆம் ஆண்டில் 2,831 இந்தியர்கள் கனடா நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மேற்கொள்ளப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில், மொத்தம் 18,969 பேரில் 2,831 இந்தியர்களை நாட்டில் இருந்து வெளியேற்றுமாறு கனடிய எல்லை சேவைகள் நிறுவனம் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு…

கடந்த 2019- ஆம் ஆண்டு கனடா நாட்டில் இருந்து 625 இந்தியர்கள் மட்டுமே வெளியேற்றப்பட்டிருந்தனர். கடந்த 2024- ஆம் ஆண்டு 1,997 பேரும், 2025-இல் 2,831 பேரும் வெளியேற்றப்பட்டனர். கனடா நாட்டில் இருந்து எதற்காக இவ்வளவு இந்தியர்கள் வெளியேற்றப்படுகிறார்கள் என்ற விவரத்தை அந்த நாட்டு அரசு வெளியிடவில்லை. இருப்பினும் அகதிகள் கோரிக்கைகளுடன் தொடர்புடைய 15,605 பேர் வெளியேற்றப்பட்டுள்ளாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: இந்தோனேசியாவில் 7 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து.. கர்ப்பிணி உட்பட 20 பேர் உடல் கருகி பலி!

பட்டியலில் முதலிடம் வகிக்கும் இந்தியர்கள்

இந்த எண்ணிக்கையானது கடந்த 2024- இல் 17,357- ஆக இருந்த நிலையில், 2025- இல் 18,785- ஆக அதிகரித்துள்ளது. கனடா நாட்டில் இருந்து வெளியேற்றப்படுபவர்கள் பட்டியலில் இந்தியர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். இதில் மொத்தம் உள்ள 29, 542 பேரில் 6, 515 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். இருப்பினும் கட்டாய வெளியேற்றங்களுக்கான புள்ளி விவரத்தில் மெக்சிகோவை சேர்ந்த குழுவும் முன்னிலை வகித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கையானது கடந்த 2024- ஆம் ஆண்டில் 3,683 ஆகவும், 2025- இல் 3,972- ஆக உயர்ந்துள்ளது.

கனடாவில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்

இவற்றில் அகதிகள் கோரிக்கைகள் தொடர்பான அதிகபட்ச மீறல்களுக்கான எண்ணிக்கையானது 15,605 ஆகும். கனடாவில் பொது மக்களை மிரட்டி பணம் பறித்தல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதாக கூறி 5 பேர் கனடா நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதே போல, 450 தபால்களை திருடியதாக கூறப்படும் வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

கனடா நாட்டு பிரதமர் கூறிய தகவல்

இவர்கள் மீது 344 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனடா நாட்டில் இருந்து வெளிநாடுகளை சேர்ந்த குற்றவாளிகளை நாடு கடத்துவதில் தனது அரசு தீவிரமாக கவனம் செலுத்தும் என்று அந்த நாட்டின் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில் தான், தற்போது, கனடாவில் வசித்து வரும் வெளிநாட்டினர் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருவதாக தெரிகிறது.

மேலும் படிக்க: சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த இன்று முதல் தடை…எந்த நாட்டில் தெரியுமா!