Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இந்தோனேசியாவில் 7 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து.. கர்ப்பிணி உட்பட 20 பேர் உடல் கருகி பலி!

Indonesia Jakarta Fire Accident Killed 20 | இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்தாவில் உள்ள 7 மாடி கட்டடத்தில் நேற்று (டிசம்பர் 09, 2025) கடும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கர்ப்பிணி பெண் உட்பட 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்தோனேசியாவில் 7 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து.. கர்ப்பிணி உட்பட 20 பேர் உடல் கருகி பலி!
தீ விபத்துக்குள்ளான கட்டடம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 10 Dec 2025 07:43 AM IST

ஜகர்தா, டிசம்பர் 10 : இந்தோனேசியாவின் (Indonesia) தலைநகர் ஜகர்தாவில் உள்ள அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் நேற்று (டிசம்பர் 09, 2025) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த கர்ப்பிணி பெண் ஒருவர் உட்பட மொத்தம் 20 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்தோனேசியா அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து சம்பவம் தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.

அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து – 20 பேர் பரிதாப பலி

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்தாவில் 7 மாடி கட்டடம் ஒன்று இருந்தது. இந்த கட்டடத்தில் எதிர்பாராத விதமாக நேற்று (டிசம்பர் 09, 2025) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கட்டடத்தின் முதல் தளத்தில் பற்றிய தீ, மெல்ல மெல்ல கட்டடம் முழுவதும் பரவ தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் கட்டடத்தில் பரவி இருந்த தீயை அணைக்க போராடியுள்ளனர். ஆனால், தீயை அணைப்பது அவர்களுக்கு மாபெரும் சவாலாக மாறியுள்ளது.

இதையும் படிங்க : மயங்கிய ஓட்டுனர்.. வானில் பறந்த பென்ஸ் கார்.. ஷாக்கிங் விபத்தின் வைரல் வீடியோ

தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்பு பணிகள்

இந்த விபத்தில் ஒரு கர்ப்பிணி பெண் உட்பட மொத்தம் 20 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கட்டடத்தில் மேற்பகுதியில் சிலர் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து கூறியுள்ள ஜகர்தா மத்திய போலீஸ் பிரிவின் தலைவர் சுஷோடா பர்னாமோ, கட்டத்தில் சிக்கிய 20 பேரை மீட்டுள்ளோம். இதில் 5 ஆண்கள் மற்றும் 15 பெண்கள் அட்ங்குவர் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : அமெரிக்காவின் அழுத்தத்திற்கு மத்தியில் இந்தியா – ரஷ்யா தலைவர்கள் சந்திப்பு.. என்ன சொல்கிறது? சீனா விளக்கம்

தீவிர விசாரணையில் இறங்கியுள்ள காவல்துறை

தீ விபத்துக்குள்ளான இந்த கட்டத்தில் இந்தோனேசியாவின் பிரபல ட்ரோன் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.  இந்த நிலையில், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.