பாகிஸ்தான் பாதுகாப்பு படை தலைவராக ஆசிம் முனீர் நியமனம்!
Pakistan Cdf Asim Munir: பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு படை தலைமை தளபதியாக பீல்ட் மார்சல் ஆசீம் முனீர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக் காலம் கடந்த 29- ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் ராணுவ தளபதியாக இருந்து வருபவர் ஆசிம் முனீர். இவரை ராணுவ தலைமை தளபதி மற்றும் பாதுகாப்பு படை தலைவர் ஆகிய இரண்டு பதவிகளுக்கு நியமிப்பதற்காக அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் ஜனாதிபதிக்கு பரிந்துரைத்திருந்தார். அதன்படி, பாகிஸ்தானின் முதல் பாதுகாப்பு படை தலைவராக சையத் ஆசிம் முனிரை ஐந்து ஆண்டு காலத்துக்கு பீல்ட் மார்சலாக நியமிக்க அந்த நாட்டின் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தார் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான ஒப்புதல் குறித்த அறிவிப்பை பாகிஸ்தான் ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில்…
பாகிஸ்தானின் முதல் பாதுகாப்பு படை தளபதியை நியமிப்பதற்காக கடந்த நவம்பர் 29- ஆம் ஷெபாஷ் ஷெரீப் அரசு அறிவித்திருந்தது. அதன்படி ஆசீம் முனீரின் 3 ஆண்டு கால ராணுவ தளபதி பதவி காலம் கடந்த 29- ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அவருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க வேண்டும் என்று பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் விருப்பம் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க: ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வருகை – பிரதமர் மோடியுடன் ஒரே காரில் பயணம்




ராணுவ கட்டளையை மையப்படுத்துமே நோக்கில்
அதன்படி, ராணுவ கட்டளையை மையப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அரசியலமைப்பின் 27- வது திருத்தத்தின் கீழ் பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதியில் ஆசீம் முனீரை நியமிப்பது என்று கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டது. இதே போல பாகிஸ்தான் விமானப்படை தளபதி ஜாகிர் அகமது பாபர் சித்துவுக்கு கூடுதலாக இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த உத்தரவானது 2026 மார்ச் 19-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
பீல்ட் மார்சல் பதவியை பெற்ற 2- ஆவது ராணுவ அதிகாரி
இந்த ஆண்டு பீல்ட் மார்ஷல் பதவிக்கு பதவி உயர்வு பெற்ற ஆசீம் முனீர் பாதுகாப்பு படை தளபதி கடமைகளுடன், ராணுவ தலைமை தளபதி பதவியையும் வகிப்பார். கடந்த 1965- ஆம் ஆண்டு இந்தியாவுடன் ஏற்பட்ட போரின் போது பாகிஸ்தானை வழி நடத்திய ராணுவ ஜெனரல் அயூப் கானுக்குப் பிறகு பீல்ட் மார்சல் பதவியை பெற்ற இரண்டாவது ராணுவ அதிகாரி ஆசீம் முனீர் ஆவார்.
முப்படைகளின் தலைமை தளபதி
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ராணுவத்தில் முப்படைகளின் தலைமை தளபதி ஆக எம்.என்.நரவனே நியமிக்கப்பட்டார்.அதன்படி, ராணுவ தளபதி ஆசிம் முனிரை தலைமை தளபதியாக நியமிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் முப்படைகளின் தலைமை தளபதியாக ஆசிம் முனீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க:ரஷ்ய அதிபர் புதினுக்கு பகவத் கீதையை பரிசளித்த பிரதமர் மோடி!