Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் திடீரென துப்பாக்கி சூடு – 10 பேர் பலி… பலர் படுகாயம்

Australia Shooting Horror: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பாண்டி பீச் (Bondi Beach) பகுதியில் நடைபெற்ற ஹனுக்கா விழா நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்திருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் திடீரென துப்பாக்கி சூடு – 10 பேர் பலி… பலர் படுகாயம்
கடற்கரையில் நடந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 14 Dec 2025 17:14 PM IST

ஆஸ்திரேலியாவின் (Australia) சிட்னி நகரில் உள்ள பாண்டி கடற்கரையில் (Bondi Beach) பகுதியில் நடைபெற்ற ஹனுக்கா விழா நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட துப்பாக்கிச்சூடு (Gun Shoot) சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்திருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வெளியான தகவலின் படி, ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்த இந்த நிகழ்வில் இரண்டு பேர் திடீரென தங்களிடம் இருந்த துப்பாக்கிகளால்  சுடத் தொடங்கினர். இதனால் பதற்றமடைந்த மக்கள் அங்கிருந்து தப்பித்து ஓடி அருகில் உள்ள கட்டிடங்கள் மற்றும் கடைகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் பலர் படுகாயமடைந்திருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கி சூடு நடத்தியவரை சுட்டுக்கொன்ற காவல்துறை

துப்பாக்கி சூடு சம்பவம் குறத்து தகவலறிந்த நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இந்த நிலையில் இரண்டு பேருக்கும் காவல்துறையினருக்கும் சண்டை நீடித்தது. இதில் துப்பாக்கி சூடு நடத்திய இருவரில் ஒருவர் சுட்டுக்கொல்லப்ப்டடார். மற்றொருவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து அந்த கடற்கரை பகுதி முழுமையாக மூடப்பட்டு கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிக்க : விமான பாணியாளருக்கு திடீர் உடல்நல சிக்கல்.. விரைந்து செயலாற்றி உயிரை காப்பாற்றிய தமிழக மருத்துவர்கள்!

இந்த விபத்தில் காயமடைந்தவர்களை உடனே சிட்னி நகரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி, ஆல்பனீஸ் வெளியிட்ட அறிக்கையில், பாண்டி கடற்கரையில் நடந்த காட்சிகள் மிகுந்த அதிர்ச்சிகரமானவை.

துப்பாக்கி சூடு தொடர்பாக வைரலாகும் வீடியோ

 

காவல்துறையினர் மற்றும் அவசர சேவை பிரிவினர் மக்களின் உயிரை காப்பாற்ரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பத்தினருடன் அரசு துணை நிற்கும். அந்த  பகுதியின் காவல் கண்காணிப்பாளருடன் பேசியதாகவும், பொதுமக்கள் காவல்துறையினரின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : 2025ல் உலகில் சிறந்த வாழ்க்கை தரத்தை வழங்கும் டாப் 10 நாடுகள்.. பட்டியல் இதோ!!

இந்த நிலையில் காவல்துறையினர் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் காவல்துறை நடவடிக்கை இன்னும் தொடர்கிறது. பொதுமக்கள் அந்த பகுதியை தவிர்க்க வேண்டும். சம்பவ இடத்தில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் இந்த துப்பாக்கி சூடு சம்பவங்கள் வேகமாக பரவி வருகின்றன.

இந்த நிலையில் துப்பாக்கி சூடு நடத்தியவர்களின் நோக்கம் என்ன?  அவர்களின் பின்னணி உள்ளிட்ட தகவல்கள் குறித்து காவல்துறை விசாரித்து வருகின்றனர். அடுத்த அறிவிப்பு வரும் வரை அந்த கடற்கரை பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். வெளிநாடுகளில் பொதுமக்கள் அதிகம் அளவில் கூடும் இடங்களில் இதுபோன்ற துப்பாக்கி சூடு நடத்தப்படும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.