IPL 2025 Resumes: ஐபிஎல் விளையாடுவது வீரர்களின் தனிப்பட்ட முடிவு.. பிசிசிஐ ஆதரவு தெரிவித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா!
Australia's IPL 2025 Participation: இந்தியா-பாகிஸ்தான் மோதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2025, மே 17 முதல் மீண்டும் தொடங்குகிறது. ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல்லில் விளையாடுவார்களா என்பது கேள்விக்குறியாக இருந்தது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா, வீரர்களின் விருப்பத்தை மதிப்பதாக அறிவித்தது. ஆனால், WTC இறுதிப் போட்டி நெருங்கியுள்ளதால், ஆஸ்திரேலிய, தென்னாப்பிரிக்கா வீரர்கள் பங்கேற்பு சந்தேகத்திற்குரியதாக உள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான சண்டை (India-Pakistan Conflict) காரணமாக ஐபிஎல் 2025 (IPL 2025) பாதியில் நிறுத்தப்பட்டது. இதன்காரணமாக, ஐபிஎல்லில் விளையாடிய பல வெளிநாட்டு வீரர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பினர். இந்தநிலையில், தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2025 சீசனானது மீண்டும் வருகின்ற 2025 மே 17ம் தேதி முதல் தொடங்கி 2025 ஜூன் 3ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஐபிஎல் 2025ன் மீதமுள்ள போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்கள் விளையாட மாட்டார்கள் என்ற செய்தி கடந்த சில நாட்களாக வெளியானது. இந்தநிலையில், இதுகுறித்து முக்கியமான அப்டேட் ஒன்றை கிரிக்கெட் ஆஸ்திரேலியா (Cricket Australia) வெளியிட்டுள்ளது. இந்த செய்தியானது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்ததா அல்லது மகிழ்ச்சியை கொடுத்ததா என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா:
ஐபிஎல் 2025ல் மீதமுள்ள போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்கள் விளையாடுவது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்ட அறிக்கையில், “ ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல்லில் மீண்டும் விளையாட விரும்பினால், அவர்கள் தாராளமாக செல்லலாம். விளையாட செல்லும் வீரர்களை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தடுக்காது. அவர்கள் செல்ல விரும்புகிறார்களா இல்லையா என்பது வீரர்களின் விருப்பத்தை பொறுத்தது. ஐபிஎல்லுக்குத் திரும்புவதற்கான வீரர்களின் தனிப்பட்ட முடிவை மதிப்போம். மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக பிசிசிஐ மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கத்துடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம்” என்று தெரிவித்திருந்தது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி:
வருகின்ற 2025 ஜூன் 11ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை இங்கிலாந்தில் உள்ள லாட்ர்ஸ் ஸ்டேடியத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் மோத இருக்கின்றனர். இந்தநிலையில், ஐபிஎல் 2025ல் இடம்பெற்றுள்ள பெரும்பாலான ஆஸ்திரேலிய மற்றும் தென்னாப்பிரிக்கா வீரர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான அணியிலும் இடம் பெற்றுள்ளனர். ஐபிஎல் 2025 இறுதிப்போட்டி முடிந்த அடுத்த 8 நாட்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடங்கவுள்ளது. எனவே, இதை மனதில் வைத்துக்கொண்டு ஆஸ்திரேலிய மற்றும் தென்னாப்பிரிக்கா வீரர்கள் பங்கேற்க யோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
WTC 2025 இறுதிப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி:
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், மேத்யூ குஹ்னேமன், மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர். பிரெண்டன் டாகெட் (ரிசர்வ் வீரர்)
WTC 2025 இறுதிப் போட்டிக்கான தென்னாப்பிரிக்கா அணி:
டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி ஜோர்ஜி, ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, கேசவ் மகராஜ், லுங்கி என்கிடி, கார்பின் போஷ், கைல் வெர்ரைன், டேவிட் பெடிங்ஹாம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், செனுரன் முத்துசாமி, டேன் பேட்டர்சன்